பேராவூரணி அரசுப்பள்ளிகளில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் துவக்க விழா - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday, 3 October 2025

பேராவூரணி அரசுப்பள்ளிகளில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் துவக்க விழா


பேராவூரணி அரசுப்பள்ளிகளில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் துவக்க விழா 


தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய இரு இடங்களில்  நாட்டு நலப்பணித் திட்ட முகாம் துவக்க விழா நடைபெற்றது.


பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் த.மேனகா, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்  தலைமை ஆசிரியர் மாரிமுத்து ஆகியோர் தலைமை வகித்தனர்.


தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் ஆகியோர் இரு இடங்களிலும் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்துப் பேசினர்.


நிகழ்ச்சிகளில், முன்னாள் ஒன்றியப் பெருந்தலைவர் டி.பழனிவேல், மு.கி.முத்துமாணிக்கம், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்கள் சுப.சேகர், க.அன்பழகன், கல்விப்புரவலர்கள் வை.ரவிச்சந்திரன், கோ.இளங்கோ, என்.எஸ்.சேகர், குழ.செ.அருள்நம்பி, ஜெயப்பிரகாஷ், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் மகேஸ்வரி, உதவி தலைமை ஆசிரியர்கள் ம.காளீஸ்வரி, த.புவனேஸ்வரி, ப.லெட்சுமி மற்றும் இருபால் ஆசிரியர்கள், மக்கள் பிரதிநிதிகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 


ஏற்பாடுகளை, பெண்கள் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஜெ.ராதிகா, ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சோழ.பாண்டியன், உதவித் திட்ட அலுவலர் ஏ.முருகேசன் செய்திருந்தனர். 


நாட்டு நலப்பணித் திட்ட முகாமையொட்டி தெருக்களை தூய்மை செய்தல், பெண்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு, காய்கறி தோட்டம் உருவாக்குதல், தீத்தடுப்பு விழிப்புணர்வு மற்றும் பேரிடர் மேலாண்மை, உயர் கல்வி வழிகாட்டுதல் குறித்த நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 


பேராவூரணி த.நீலகண்டன்

No comments:

Post a Comment

Post Top Ad