பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் திருக்கோயிலுக்கு சொந்தமான ரூ.25 லட்சம் மதிப்பிலான இடங்கள் மீட்பு - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday, 23 October 2025

பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் திருக்கோயிலுக்கு சொந்தமான ரூ.25 லட்சம் மதிப்பிலான இடங்கள் மீட்பு

 


பேராவூரணி  நீலகண்ட பிள்ளையார் திருக்கோயிலுக்கு சொந்தமான  ரூ.25 லட்சம் மதிப்பிலான இடங்கள் மீட்பு 


தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஏந்தல் அருள்மிகு நீலகண்ட பிள்ளையார் திருக்கோயிலுக்கு சொந்தமான ரூ.25 லட்சம் மதிப்பிலான ஐந்து இடங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டது. தஞ்சை இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையரின் நீதிமன்ற  உத்தரவின்படி , பேராவூரணி கடைவீதியில் தனியார் ஆக்கிரமிப்பிலிருந்த களம் மற்றும் வீடு , நீலகண்டபுரம் பகுதியில் இரண்டு தென்னந் தோப்பு மற்றும் மண்பானைகள் இருப்பு வைக்கப்பட்டிருந்த கூரை வீடு உள்பட 5 இடங்கள் மீட்கப்பட்டு  ,முள்வேலி அமைக்கப்பட்டு  திருக்கோயில் வசம் ஒப்படைக்கப்பட்டது. மீட்பு நடவடிக்கையில் இந்து சமய அறநிலையத்துறை  தஞ்சை உதவி ஆணையர் ஹம்சன்,  திருக்கோயில் ஆலய நிலங்கள் தாசில்தார் பார்த்தசாரதி , பேராவூரணி தாசில்தார் சுப்பிரமணியன் ,கோயில் செயல் அலுவலர் அருன் பிரகாஷ் ,பரம்பரை அறங்காவலர்கள் குழு தலைவர் கணேச சங்கரன் , அறங்காவலர் குப்பமுத்து சங்கரன், முடப்புளிக்காடு கிராமத்தார்கள் சார்பில் செழியன் ,வருவாய்த்துறை அலுவலர்கள், போலீசார் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள்   உடன் இருந்தனர்.


பேராவூரணி நீலகண்டன்

No comments:

Post a Comment

Post Top Ad