சேதுபாவாசத்திரம் அருகே மேச்சலுக்கு சென்ற 5மாடுகள் இறப்பு. 10 மாடுகள் கவலைகிடம். அதிமுக ஒன்றிய செயலாளர் இளங்கோ நேரில் ஆறுதல், நிதி உதவி.
பேராவூரணி தஞ்சைமாவட்டம் ,சேதுபாவாசத்திரம் ஒன்றியம், பூவானம் ஊராட்சி, கீழபூவானம் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமிசித்திரவேல் ,மாரியம்மாள் ராஜேந்திரன், சாந்தி பொட்டுக்கன்னு, நீலாவதி சூரியமூர்த்தி, சீரங்கம் குணசேகரன் ஆகியோர் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் . தங்களின் வாழ்வாதரத்துக்காக கால்நடைகள் வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் மேச்சலுக்கு சென்று வீடு திரும்பிய மாடுகள் மர்மமான முறையில் 5 மாடுகள் இறந்து விட்டன. மேலும் 10 மாடுகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்துள்ளது. இதனையறிந்த பேராவூரணி அதிமுக முன்னால் எம்எல்ஏ மா.கோவிந்தரா சுமகனும் பேராவூரணி தெற்கு ஒன்றிய கழகச் செயலாளருமான கோவி_இளங்கோ சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கால்நடை விவசாயிகளுக்கு ஆறுதல் கூறி நிதிஉதவி செய்தார். மேலும் அந்தப் பகுதி கால்நடை இயக்குனரிடம் தொடர்பு கொண்டு உரியநிவாரணம் பெற்றுத்தர வலியுறுத்தினார். ஒன்றிய குழு உறுப்பினர் கவிதா செல்வக்குமார், மாவட்ட பிரதிநிதி கோ.ப.ரவி, ஒட்டங்காடு ஐங்கரன் ரவிச்சந்திரன், முன்னாள் ஊராட்சி செயலாளர் கே.ராஜேந்திரன், முன்னாள் ஊராட்சி செயலாளர்,கிளைக் கழக செயலாளர் பி.கலியமூர்த்தி ,ஒன்றிய தகவல் தொழில்நுட்பஅணி பி.ராஜசேகர் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
பேராவூரணி நீலகண்டன்

No comments:
Post a Comment