அமித்ஷாவை கண்டித்து பேராவூரணியில் விசிக தலைமையில் அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம்
பேராவூரணி, டிச.20 - அம்பேத்கரை இழிவு படுத்திப் பேசிய ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்தும், அவர் பதவி விலகக் கோரியும், தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பெரியார் சிலை அருகில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஏற்பாட்டில், அனைத்து கட்சிகள், இயக்கங்கள் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் க.ப.அரவிந்த் குமார் தலைமை வகித்தார். இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பா. பாலசுந்தரம், ராஜமாணிக்கம், மூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ஆர். மனோகரன், வி.ஆர்.கே. செந்தில்குமார்,
வீ.கருப்பையா, அறநெறி மக்கள் கட்சி ஆயர் த.ஜேம்ஸ், மதிமுக க.குமார், காங்கிரஸ் கட்சி சேக் இபுறாகிம்ஷா, திராவிடர் கழகம் வை. சிதம்பரம், இரா.நீலகண்டன், திராவிடர் விடுதலைக் கழகம் சித.திருவேங்கடம், தமிழ் வழிக் கல்வி இயக்கம் சின்னப்பத்தமிழர், மனிதநேய ஜனநாயக கட்சி அப்துல்சலாம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் நா. இளந்தென்றல், பேராவூரணி ஒன்றியச் செயலாளர் சிவா, நகர செயலாளர் மைதீன், ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதி செயலாளர் அரச. முதல்வன், செ.கௌதமன், எஸ்.எஸ்.சதாம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் அமித்ஷாவை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பேராவூரணி த.நீலகண்டன்
No comments:
Post a Comment