பேராவூரணியில் கண்டன ஆர்ப்பாட்டம்
பேராவூரணி, டிச 20 தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் திமுக சார்பில் ராஜ்யசபாவில் அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட அவைத்தலைவர் சுபசேகர் தலைமை வகித்தார். தலைமை பொதுக்குழு உறுப்பினர் அப்துல்மஜீத் கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில், கடந்த 18ம் தேதி ராஜ்யசபாவில் அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவர் மன்னிப்பு கோர வலியுறுத்தியும், பதவி விலக வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் திமுகவினர் ஈடுபட்டனர்.
இதில் ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், முத்துமாணிக்கம், ரவிச்சந்திரன், இளங்கோ, நகரச் செயலாளர் சேகர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்.
பேராவூரணி த.நீலகண்டன்
No comments:
Post a Comment