விபத்துக்கள் நடக்கும் இடமாக மாறும் பேராவூரணி அண்ணா சிலை பகுதி - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday, 21 December 2024

விபத்துக்கள் நடக்கும் இடமாக மாறும் பேராவூரணி அண்ணா சிலை பகுதி

.com/img/a/

 

IMG-20241221-WA0066

விபத்துக்கள் நடக்கும் இடமாக மாறும் பேராவூரணி அண்ணா சிலை பகுதி


பேராவூரணி டிச-22 தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அண்ணா சிலை அருகில் பல ஆண்டுகளாக காவலர் கண்காணிப்பு அறை உள்ளது. இந்த பகுதியில் காலை மாலை நேரங்களில் வாகன போக்கு வரத்து அதிகம் இருப்பதால் அதை ஒழுங்குப் படுத்துவதற்காக போலிசார் பணியில் இருந்து வந்தனர். ஆனால் சில ஆண்டுகளாக இப்பகுதியில் காவல்துறை சார்பில் ஒருவரும் வருவதில்லை இதனால் இந்த காவலர் கண்காணிப்பு அறை பயனற்று உள்ளது. மேலும் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் இந்தப் அறையை தவறாக பயன்படுத்தி வருவதாகவும் கூறுகின்றனர். மேலும் இந்தப் காவலர் கண்காணிப்பு அறையின் வெளிப்புறத்தில் விளம்பர போஸ்டர்கள் ஒட்டுவதும் . மற்றும் கண்ணீர் அஞ்சலி போடு வைத்தும் வருகின்றனர். மேலும் இப்பகுதியில் ( பேரி கார்டு) தடுப்பு கம்பிகள் இல்லாததால் சாலை விதிகளை மீறி குறுக்கும் நெடுக்குமாக வாகனங்கள் செல்கின்றன இதனால் இப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருகிறது. எனவே பயனற்று இருக்கும் போலிஸ் கண்காணிப்பு அறை மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவுப்படுத்தி விபத்தில்லாமல் போக்குவரத்து நடைபெற இது சம்மந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad