பேராவூரணியில் விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
பேராவூரணி டிச-17 தஞ்சை மாவட்டம் பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க மாநில குழு உறுப்பினர் ராஜமாணிக்கம் பேராவூரணி ஒன்றிய தலைவர் கருப்பையா ஒன்றிய செயலாளர் சித்திரவேல் சண்முகம் ஆகியோர் தலைமை வகித்தனர். சிபிஐ ஒன்றிய செயலாளர்கள் தட்சிணாமூர்த்தி வீரமணி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தனர். மகாத்மா காந்தி வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் அனைவருக்கும்100 நாள் வேலை வழங்க வேண்டும். விவசாயத் தொழிலாளர் பாதுகாப்பிற்கு மீண்டும் நல வாரியம் அமல் படுத்த வேண்டும். உழவர் பாதுகாப்பு திட்டத்தில் நிலுவையில் உள்ள பயனாளிகளுக்கு உடனடியாக உதவி தொகை வழங்க வேண்டும். குடிமனை பட்டா வீடு கேட்டு முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கையை பரிசீலித்து குடிமனை பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஐ மாவட்ட குழு பாலசுந்தரம் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.
பேராவூரணி த.நீலகண்டன்

No comments:
Post a Comment