பேராவூரணி மழை வெள்ள பாதிப்புகள் எம்எல்ஏ - வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday, 14 December 2024

பேராவூரணி மழை வெள்ள பாதிப்புகள் எம்எல்ஏ - வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு

 


பேராவூரணி மழை வெள்ள பாதிப்புகள் எம்எல்ஏ - வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு


பேராவூரணி, டிச.14 -தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியில் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஜெயஸ்ரீ ஆகியோர் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் முழங்கால் அளவு தண்ணீரில் இறங்கி நடந்து சென்று குடியிருப்பு பகுதியில் ஆய்வு செய்து மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர். 


பேராவூரணி அருகே உள்ள ரெட்டவயல் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் வெள்ளநீர் தேங்கி நிற்பதை பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் நேரில் சென்று பார்வையிட்டார். அதே போல் கிழக்கு கடற்கரை சாலையில் செந்தலைப்பட்டினம் பகுதியில் விளங்குளம் ஏரி நிரம்பி, வெளியேறும் தண்ணீர் கிழக்கு கடற்கரை சாலையில் சுமார் 2 அடி உயரத்திற்கு செல்கிறது. 


இப்பகுதியில் இறால் பண்ணை ஆக்கிரமிப்பு காரணமாக, குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதேபோல், சம்பைபட்டினம்  பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையில் முழங்கால் அளவுக்கு சாலையில் தண்ணீர் செல்வதால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன.


சேதுபாவாசத்திரம் மற்றும் செந்தலைப்பட்டினம் குடியிருப்பு பகுதியில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்பதை,, வெள்ள நீரில் இறங்கிச் சென்று சட்டப்பேரவை உறுப்பினர், வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் தெய்வானை, சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு தலைவர் மு.கி.முத்துமாணிக்கம், திமுக சேதுபாவாசத்திரம் தெற்கு ஒன்றியச் செயலாளர் வை.ரவிச்சந்திரன் சேதுபாவாசத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாகேந்திரன், சடையப்பன், உள்ளிட்டோர் பார்வையிட்டு மோட்டார் இயந்திரம், பொக்லைன் இயந்திரம் மூலம் மழைநீரை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். 


பேராவூரணி த.நீலகண்டன்

No comments:

Post a Comment

Post Top Ad