நல்லாசிரியர், முருகனடிமை ஆம்பல் முருக. வைத்திலிங்கனார், 4-ஆம்ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி
தஞ்சாவூர் அப்பர் தமிழ் மன்ற நிறுவனர், சித்தாந்த ரெத்தினம் முருகன் அடிமை,சிவ பூசகர்,நல்லாசிரியர், ஆம்பல் முருக. வைத்திலிங்கனார் அவர்களின்,4-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்ச, பெசன்ட் அரங்கில், வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில்நல்லாசிரியர், ஆம்பல் முருக. வைத்திலிங்கனார் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி புகழஞ்சலி செலுத்தினார்கள்.
தொடர்ந்து பழனி. பாதயாத்திரை குழு தலைமை குருசாமி, முருகன் அடிமை சிவத்திரு.கே. புண்ணியமூர்த்தி தலைமை தாங்கினார், தேவார இசை மாமணி சித்தாந்த ரெத்தினம் சிவத்திரு, டாக்டர்.ச.திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார்,
சிறப்பு விருந்தினராக திருவையாறு அரசர் கலைக்கல்லூரி, முனைவர், சண்முக. செல்வகணபதி, திருப்புகழ் தமிழாகரர். பெரும்பாணநம்பி, நூலை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார். ஜோதிடர் சிவத்திரு,குரு. சிவசுப்பிரமணியன் அறிமுக உரையாற்றினார். . ஆம்பல் நலச்சங்க, ஆம்பல் ஜெகநாதன் நூலை பெற்றுக்கொண்டார்
முன்னதாக நல்லாசிரியர் சித்தாந்த ரெத்தினம். அகோர சிவம்,குரு. புவன சுந்தரலெட்சுமி ,ஆகியோர் வரவேற்றார். நிறைவில் பேராவூரணி சைவ சித்தாந்த அமைப்பாளர்,சிவ. மதியழகன் நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் சிவத்திரு நல்லாசிரியர் குரு. புவனசுந்தரலெட்சுமி குடும்பத்தார்கள் நண்பர்கள் அப்பர் தமிழ் மன்ற சிவனடியார்கள் திருக்கூட்டத்தினர் மற்றும் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment