கும்பகோணத்தில் அம்பேத்கார் நினைவு தினம்
கும்பகோணத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் வாயில் முன்பு, இந்திய குடியரசு கட்சி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பாபா சாகேப் அம்பேத்கர் குடியரசு தொழிற்சங்கத்தின் சார்பில், இந்திய குடியரசு கட்சியின் மாநில தொழிற்சங்க பொதுச் செயலாளர் கௌதமன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து, வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தொழிற்சங்க நிர்வாகிகள் மண்டல தலைவர் தியாகராஜன், செயல் தலைவர் மணிகண்டன், பொருளாளர் கண்ணுசாமி சங்கர், துணைத் தலைவர் கோபிநாத், அமைப்புச் செயலாளர் சுந்தரமூர்த்தி, நாகை மண்டல பொதுச்செயலாளர் ரமேஷ், பொருளாளர் மதியழகன், இணைச் செயலாளர் சுதாகரன், துணைத் தலைவர் செல்வேந்திரன், கனகராஜ், தஞ்சை புறநகர் தலைவர் மணிகண்டன், இளையபெருமாள், பேரவை தலைவர் வீரமணி, இந்திய குடியரசு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஏ மதன்குமார் செய்தியாளர் கும்பகோணம்
No comments:
Post a Comment