பேராவூரணி அருகே தீ விபத்து, பாதிக்கப்பட்டவருக்கு நிதியுதவி
பேராவூரணி நவ- 15 தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள குருவிக்கரம்பை ஊராட்சி, வடக்கு நாடாகாடு பகுதியைச் சேர்ந்தவர் விஜயராணி (45), விவசாயக் கூலித் தொழிலாளி. இவரது கணவர் பழனிவேல் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.
விஜயராணிக்கு திருமணமான இரு மகள்களும், பேராவூரணி அரசு கலை அறிவியல் கல்லூரியில் படித்து வரும் திருமணமாகாத ஒரு மகளும் உள்ளனர். இந் நிலையில் அதிகாலை சிறிய மண்ணெண்னை விளக்கில் இருந்து வெளியேறிய தீப்பொறி கூரையில் பட்டு, திடீரென அவரது வீடு தீப்பற்றி எரிந்தது.
இதில் வீட்டிலிருந்த பொருட்கள், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, மாணவியின் பள்ளி சான்றிதழ்கள், தீயில் எரிந்து நாசமானது. இதையடுத்து, பேராவூரணி வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து விவரங்களை கேட்டறிந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பேராவூரணி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் மா.கோவிந்தராசு அறிவுறுத்தலின் பேரில், அவரது மகனும் அதிமுக பேராவூரணி தெற்கு ஒன்றியச் செயலாளருமான கோவி.இளங்கோ பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிதியுதவி, அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கினர்.
இந்நிகழ்வில் முன்னாள் கயிறு வாரியத் தலைவர் எஸ்.நீலகண்டன், சேதுபாவாசத்திரம் தெற்கு ஒன்றியச் செயலாளர் கே.எஸ்.அருணாச்சலம், நிர்வாகிகள் செல்வகுமார், ராமசாமி, கிளைச் செயலாளர் நிபினேஷ், பரஞ்சோதி, கோ.பா.ரவி, ஆர்.கே.சிவா, மாவடுகுறிச்சி காந்தி, எஸ்.கார்த்தி,ஒட்டங்காடு ரவி, ஆகியோர் உடனிருந்தனர்.
பேராவூரணி செய்தியாளர் த.நீலகண்டன்

No comments:
Post a Comment