பேராவூரணி புகைவண்டி நிலையத்தில் ரயில் பழுதாகி நின்றதால் பயணிகள் அவதி.
தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் திருவாரூரில் இருந்து காரைக்குடி செல்லும் பயணிகள் ரயில் காலை 8.15 மணி அளவில் புகைவண்டி நிலையம் வந்தடைந்தது. அப்போது இன்ஜின் அருகில் உள்ள பயணிகள் பெட்டியில் சக்கரம் இயங்கும் இடத்தில் திடீரென சத்தம் கேட்டுள்ளது. ஒரு சக்கரம் மட்டும் இயங்காமல் இருந்தது.இதனை கவனித்த பேராவூரணி ரயில்வே பணியாளர்கள் உடனடியாக தகவல் தெரிவித்து உள்ளனர் இதனையறிந்த,பட்டுக்கோட்டை ரயில்வே போலிஸ் உடனே வந்தடைந்தனார், பழுதான ரயில் பெட்டியை மட்டும் கழட்டி எடுத்து மற்றொரு ரயில் பாதையில் நிறுத்திவிட்டு. இரண்டு மணி நேரம் 40 நிமிடம் கழித்து மற்ற ரயில் பெட்டிகளை இணைத்துக்கொண்டு காரைக்குடி நோக்கி புறப்பட்டு சென்றது. இதனால் அறந்தாங்கி பாலிடெக்னிக் செல்லும் மாணவர்கள் கல்லூரிக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். மேலும் காரைக்குடி சென்று வெளியூர் செல்லும் பயணிகள் தாமதமாக சென்றனர்.
பேராவூரணி செய்தியாளர் த.நீலகண்டன்
No comments:
Post a Comment