நெல் சாகுபடி மும்முரமாக நடந்து வரும் நிலையில் பயிர்க்கடன் வழங்காமல் கூட்டுறவுத்துறை ஏமாற்றி வருவதை வன்மையாக கண்டிக்கிறேன்.:ஏ கே ஆர் ரவிச்சந்தர் - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday, 22 November 2024

நெல் சாகுபடி மும்முரமாக நடந்து வரும் நிலையில் பயிர்க்கடன் வழங்காமல் கூட்டுறவுத்துறை ஏமாற்றி வருவதை வன்மையாக கண்டிக்கிறேன்.:ஏ கே ஆர் ரவிச்சந்தர்

 


நெல் சாகுபடி மும்முரமாக நடந்து வரும் நிலையில் பயிர்க்கடன் வழங்காமல் கூட்டுறவுத்துறை ஏமாற்றி வருவதை வன்மையாக கண்டிக்கிறேன்.:ஏ கே ஆர் ரவிச்சந்தர் 


தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் பயிர்கள் காப்பீடு பிரிமியம் செலுத்தும் தேதியை நீடித்ததற்கு மாவட்ட ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் , ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.


விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா தலைமை வகித்தார். இதில் கோட்ட அளவிலான விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்தனர். பின்னர் கூட்டத்தில் பேசியதாவது காவிரி டெல்டா விவசாயகள் சங்க தலைவர் 


ஏ கே ஆர் ரவிச்சந்தர் பேசியதாவது:


அதிமுக ஆட்சிக் காலத்தில் அப்போதைய முதலமைச்சர் புரட்சிதலைவி ஜெயலலிதா உழவர் பாதுகாப்புத் திட்டம் என ஒரு உன்னத திட்டம் செயல்படுத்தி வந்தார்.கருவில் இருந்து கல்லறை வரை விவசாயிகள் பயனடையும் இத்திட்டத்தை, தமிழ்நாடு அரசு ரத்து செய்யவும் இல்லை, செயல்படுத்தவும் இல்லை மாறாக முடக்கியுள்ளது. இத்திட்டத்தில் 2.50 ஏக்கா நன்செய் அல்லது 5 ஏக்கர் புன்செய் நிலத்தை சொந்தமாக பயிர்சாகுபடி செய்யும் 18 முதல் 65 வயது அனைத்து குறு, சிறு விவசாயிகள் உறுப்பினராக சேர்க்ககப்படுவார்கள் மேலும் குத்தகை விவசாயிகளும், விவசாய கூலித் தொழிலாளர்களும் 18 முதல் 65 வயர் உடையவர்களை உறுப்பினராக சேர்த்து வட்டாட்சியர் கையெழுத்திட்ட அடையாள அட்டை வழங்குவார்கள் மேற்படி உறுப்பினர்களுக்கு, கருவுற்ற தாய்மார்களுக்கு நிதியுதவி, குழந்தைகளின் கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, விபத்து நிவாரணம், இயற்கை மரணம், மற்றும் ஈமச்சடங்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது உழவர் பாதுகாப்புத் திட்ட அடையாள அட்டையோ, உழவர் பாதுகாப்பு திட்ட பயன்பாடுகளோ வழங்கப்படாமல் மேற்படி திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே மாவட்ட ஆட்சித் தலைவர் மூலம் சுற்றறிக்கை வெளியிட்டு புதிய உறுப்பினர்களை சேர்த்து முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் மீண்டும் சிறப்புடன் செயப்படுத்துமாறு வேண்டுகிறேன். 


 ஒரு வேளாண் நிலங்களை டிஜிட்டல் முறையக்கு மாற்ற சர்வே பணியில் வேளாண் கல்லூரி மாணவ, மாணவிகளை அரசு ஈடுபடுத்தி வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநர் துவக்கி வைத்தார் "திருவையாறு ஒன்றியத்தில் குமளுர் வேளாண்மை கல்லூரி மாணவிகள், வரகூர், அம்மையகரம் உள்ளிட்ட பல கிராமங்களுக்கு வந்தார்கள் வேளாண் விரிவாக்க பணியாளர்கள் அவர்களுக்கு எந்தவிதஉதவியும் செய்யவில்லை கொட்டும் மழையில்,நடந்து,ஊர் தெரியாமல், வழிதெரியாமல் சிற்றுண்டி, தேநீர் அருந்தாமல் மிகவும் சிரமப்பட்டவர்கள் வேளாண் துறை அந்த மாணவிகளை இன்னல்படுத்தியதாக கருதி கண்டனம் தெரிவிக்கிறேன்.


தஞ்சாவூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் மூலம் புதிய விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்காமல் புறக்கணித்து வருகிறார்கள் சம்பா ,தாளடி ,நெல் சாகுபடி முழு வீச்சில் நடந்து வரும் நிலையில் பயிர்க்கடன் வழங்காமல் வஞ்சிக்கும் கூட்டுறவு துறையில் வண்மையாக கண்டிக்கிறேன்.


தமிழ்நாடு அரசு நில உரிமைச் சட்டம் 2024 என்கிற பெயரால் ஒட்டுமொத்த விளை நிலங்களையும், குடியிருப்பு பகுதிகளையும், கார்ப்பரேட் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் தொடங்குகிறேன் என்கிற ஒப்பந்தத்தின் அடிப்படையில் எந்த தடையுமின்றி கைப்பற்றி கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது விவசாயிகள் பொதுமக்கள் அடையாளத்தையும் பிறப்புரிமையையும் அழிக்கும் மோசமான சட்டத்தை தமிழ்நாடு அரசு ரத்து செய்ய வேண்டும் என எங்களது கோரிக்கைகளை அரசுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad