அய்யம்பேட்டை இந்தியன் சிட்டி மழலையர் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் அய்யம்பேட்டை கருப்பட்டையான்குளத்தில் உள்ள இந்தியன் சிட்டி மழலையர் பள்ளியில் மாணவ, மாணவிகளின் பாராட்டு மற்றும் விருது வழங்க நிகழ்ச்சிகளுடன் குழந்தைகள் தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு கடந்த வாரத்தில் நடந்த ஈரோடு காலம் கல்வி நிலையத்தில் மாவட்ட அளவில் நடைபெற்ற கட்டுரை கவிதை ஓவியம் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் இந்தியன் சிட்டி மழலையர் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பரிசு .சான்றிதழ் மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில் பள்ளியின் தாளாளர் ஜனாப். அப்துல் ரஹிம் தலைமை தாங்கினார்.தலைமை ஆசிரியர். லீலாவதி அரபி ஆசிரியர். ஜனாப். ஜாஹிர் உசேன் ஆகியோர்கள் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக அல் ஈமான் நற்பணி மன்ற தலைவர். ஜனாப். தஞ்சை அயூப்கான். ஜனாப். சுலைமான் பாட்சா ஜனாப். சபீர்அகமது தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தின்மாநில தலைவர் கே.எஸ் முகமது இப்ராஹிம் ஜனாப். ஹபீப் ரஹ்மான் ஜனாப். அப்துல் ரஷித் எஸ் டி பி ஐ.கிளை தலைவர் ஜனாப். அஸ்ஜி தஞ்சை.ஹாஜா மைதீன் ஜனாப். எம். கே.ஜாபர் ஜனாப். அயூப்கான் ஜனாப்.முகமது இப்ராஹிம் ஜனாப். தாவூத் மைதீன்.ஆகியோர் சிறப்புரை ஆற்றி பலவேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். இதில் குறிப்பாக பள்ளியில் சிறந்த ஆசிரியர் விருது வழங்கப்பட்டது.
இதில் பள்ளி ஆசிரியர்கள்.. திருமதி.ஷெரீனா திவ்யா நித்யா கெளதமி ஹமீதா சிஃபானா பர்ஹானா பீரேமா அஸ்மா போட்டோ கிராபர்.ஹஜினி மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை இந்திய சிட்டி மழலையர் பள்ளி நிர்வாகம் சிறப்பாக செய்திருந்தனர். முன்னதாக பள்ளியின் லேப் ஆசிரியர் ஜனாப். ஜாவித் வரவேற்றார்.நிறைவில். ஜனாப். வாலன்.இலியாஸ் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment