கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் கலை திருவிழா. மாணவ, மாணவிகள் உற்சாகம்.
புதுக்கோட்டை நவ 06.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வட்டார வளமையத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கலை திருவிழா போட்டி வட்டார அளவில் நடைபெற்றது. இப் போட்டியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அமிர்தம் மாலதி தொடங்கி வைத்தார். போட்டிக்கான ஏற்பாடுகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு பாரதிதாசன் செய்திருந்தார். ஆசிரியர் வட்டாரக் கல்வி அலுவலர்கள் வெங்கடேஸ்வரி, இர்சத் அகமது முன்னிலை வகித்தனர்.
ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகள் பள்ளி அளவில் முதலிடம் பெற்ற மாணவர்கள் வட்டார அளவிலான போட்டிகளில் களிமண் கதை வேலைபாடு, ஓவியம் வரைந்து வண்ணம் தீட்டுதல், மணல் சிற்பம், செவ்வியல் இசை, தனிப்பாட்டு, தனி நபர் நடிப்பு, நகைச்சுவை , பல குரல் பேச்சு, கிராமிய நடனம், வில்லுப்பாட்டு, பரதநாட்டியம், நாட்டுப்புறப்பாடல், பேச்சுப்போட்டி, திருக்குறள் ஒப்பித்தல், தேசபக்தி பாடல்கள், பரதநாட்டிய குழு, கதை கூறுதல், ஒப்புவித்தல் போட்டி, மழழையர், ஆத்திச்சூடி, மாறுவேட போட்டி, நாட்டுப்புற நடன குழு உள்ளிட்ட பல்வேறு வகையான தலைப்புகளில் போட்டிகள் நடைபெற்றது. கிராமிய நடனம் என்ற தலைப்பில் நடைபெற்ற போட்டியில் மாணவ, மாணவிகள் நடனத்திற்குரிய வண்ண, வண்ண உடைகளை அணிந்து சிறப்பாக நடனமாடி அசத்தினார் கள். களிமண்ணை பயன்படுத்தி சிற்ப வேலைப்பாடுகளை பல்வேறு வகையான இயற்கை காட்சிகளுடன் சிறப்பாக செய்தார்கள். பல குரல் பேச்சு மூலம் மாணவர்களுடைய தனித்திறமைகள் வெளிப்பட்டது. தேசபக்தி பாடல் மூலம் நாட்டுப்பற்றை போற்றி பாதுகாக்க கூடிய பாடலை பாடினார்கள். போட்டியில் ஒருங்கிணைப்பாளராக அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முத்துக்குமார், ஆசிரியர் பயிற்றுநர் செல்லதுரை,தலைமை ஆசிரியர்கள் தியாகராஜன் , பழனிவேல், செல்லச்சாமி, காளீஸ்வரன், துரையரசன், சின்னராஜா, ஜெயக்குமார், ரகமதுல்லா, கலைமணி, தவச்செல்வம், பாக்யராஜ் உள்ளிட்டோ செயல்பட்டனர். நடுவர்களாக ஆசிரியர்கள் மாணிக்கவாசகம், மணிமேகலை, மாரி அய்யா, பாலமுருகன், பிரபாகரன், வீராச்சாமி, ஜஸ்டின் திரவியம், கணேசன், சங்கர், சசிகலா, உஷா, சுதாகர், பாஸ்கரன் உள்ளிட்ட செயல்பட்டனர். சிறப்பாசிரியர்கள் அறிவழகன், ராணி, பிரியா, ரம்யா,ராதா,லீலா கணக்காளர்கள் ராஜேஸ்வரி, ராஜலட்சுமி உள்ளிட்டோர் வருகை பதிவு பராமரிப்பு பணியை செய்தனர்.

No comments:
Post a Comment