தேமுதிக சார்பில் முதியோர் இல்லத்தில் வேட்டி.சேலை வழங்கப்பட்டது.
நவ-4 தஞ்சாவூர் மத்திய மாவட்டத்தின் சார்பில் தஞ்சையில் உள்ள முதியோர்கள் இல்லத்தில் அனைவருக்கும் தீபாவளியை முன்னிட்டு வேட்டி சேலை இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்விற்கு தஞ்சை மாவட்ட கழக செயலாளர் சிவனேசன் தலைமை வகித்தார். தேமுதிக தொண்டர்கள் ஏராளமானோர்கள் கலந்துக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட செயலாளர் சிவனேசன் இல்லத்திலும் இந்நிகழ்வு நடைப்பெற்றது. அனைவருக்கும் வேட்டி சேலை மற்றும் விஜயகாந்த் படம் பொறிக்கப்பட்ட புது வருட காலண்டர் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் டி.கணேஷ்காந்த் .வி.கே.சக்திவேலன்.மு.பாஸ்கர்.செந்தில்காந்த் .டேவிட் .ஆரோக்கியராஜ்.காமராஜ்.தஞ்சை கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆனந்த். மற்றும் வார்டு நிர்வாகிகள் முனியப் பிள்ளை. செல்வம். விஜயகுமார்.மணி உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.
பேராவூரணி செய்தியாளர் த.நீலகண்டன்

No comments:
Post a Comment