சென்னை பி எஸ் உடையார் அறக்கட்டளை சார்பில் பள்ளியில் முதல் இடம் பிடித்த தஞ்சை மாணவிக்கு பரிசுத்தொகை
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அடுத்த புது சத்திரம் தெருவை சேர்ந்த மண் பாண்ட தொழிலாளி பி.ரமேஷ்குமார் மகள் பவித்ரா,இவர் சர் சிவஸ்வாமி ஐயர் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த மாதம் வெளியான தேர்வு முடிவுகளில் இவர் 564 மதிப்பெண் பெற்று தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி சர் சிவஸ்வாமி ஐயர் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் முதலிடம் பெற்றார்.
மண்பாண்ட சங்கத்தின் மூலம் சென்னை பி எஸ் உடையார் அறக்கட்டளையில் பரிசுத் தொகையாக 10,000 ரூபாய் வழங்கப்பட்டது
No comments:
Post a Comment