டிசம்பர் 8- இல் இலவச கண் சிகிச்சை முகாம்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வள்ளலார் லயன்ஸ் சங்கம் , மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை ,தஞ்சை மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் ஆகிய இணைந்து இலவச கண்புரை அறுவை சிகிச்சைக்கான மருத்துவ பரிசோதனை முகாம், வருகின்ற டிசம்பர் 8ம் தேதி நடைபெறுகிறது.
சுவாமிமலை சாலையில் உள்ளகீழக் கொட்டையூர் வள்ளலார் தொடக்கப்பள்ளியில் வருகின்ற டிசம்பர் மாதம் 8ம் தேதி, காலை 8:00 மணி முதல், மதியம் 1:00 மணி வரை நடக்கும், இம்முகாமில், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையைச் சேர்ந்த, கண் மருத்துவ நிபுணர்கள் மருத்துவ பரிசோதனை செய்கின்றனர்.
இதுகுறித்து கும்பகோணம் வள்ளலார் லயன்ஸ் சங்கம் ,தெரிவித்ததாவது: இந்த கண் சிகிச்சை முகாமில் பொதுமக்கள், விவசாயிகள் உள்ளிட்ட அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறலாம். கண்புரை உள்ள நோயாளிகள் முகாம் தினத்தன்றே மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உள்விழி லென்ஸ், அறுவை சிகிச்சை, மருந்து, தங்கும் வசதி, உணவு, போக்குவரத்து அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.
"மேலும், சா்க்கரை நோய், கண்நீா் அழுத்தம், குழந்தைகளின் கண் நோய், கிட்டப்பாா்வை, தூரப்பாா்வை, வெள்ளெழுத்து போன்ற பாா்வைக் கோளாறு இருந்தால் தகுந்த பரிசோதனை செய்யப்படும். இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொண்டாா்"
முகாமில் பங்கேற்க விரும்புவோர், 94430 32052, 99442 84239 என்ற மொபைல்போன் எண்களில் முன்பதிவு செய்யலாம்
முகாமிற்கு வருபவர்கள் ரேசன் கார்டு அல்லது ஆதார் அட்டை நகல் எடுத்து அதில் குடும்பத்தில் உள்ளவர்களின் செல் அல்லது தொலைபேசி எண்ணை எழுதி எடுத்து வரவும்
No comments:
Post a Comment