அறம் பொது நல அறக்கட்டளை சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் விழா - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday, 2 November 2024

அறம் பொது நல அறக்கட்டளை சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் விழா


அறம் பொது நல அறக்கட்டளை சார்பில் தூய்மை  பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் விழா


தஞ்சாவூர் மகர் நோன்பு சாவடியில்  அறம் பொது நல அறக்கட்டளை சார்பில் தீபாவளி முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் மற்றும் ரொக்கம் பணம் வழங்கும் நிகழ்ச்சி  கலைவாணி மன்றத்தில் வெகு விமர்சையாக சனிக்கிழமை நடைபெற்றது.


இவ்விழாவில் அறம் பொது நல அறக்கட்டளை தலைவருமான,  30ஆவது மாமன்ற உறுப்பினர் யூஎன் கேசவன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக  ஆர் என் அனந்தராமன்  சிறப்புரையாற்றினார் . தொடர்ந்து 30 வது வார்டில் பணிபுரியும் தஞ்சாவூர் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் துப்புரவு மேற்பார்வையாளர் ஆய்வாளர் மற்றும் மின் குறையை தீர்க்கும் பணியாளர்களுக்கும் பாதாள நீரோடை சரி செய்யும் தூய்மை பணியாளர்களுக்கும் தீபாவளியை பண்டிகை முன்னிட்டு வஸ்திரதானம் மற்றும் இனிப்பு பலகாரம் ரொக்கம் வழங்கி பாராட்டினார்கள்


இதில் அறம் பொது நல அறக்கட்டளை செயலாளர் எஸ் ஆர் அனந்த நாராயணன், பொருளாளர் கே டி ,விஜயகுமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad