ஆதனூர் பெரிய ஏரி மடை திறந்து விவசாயிகள் விவசாய பணிகளை தொடங்கினர்.
பேராவூரணி நவ-24 தஞ்சை மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி, ஆதனூர் கிராமத்தில் பெரிய ஏரி உள்ளது இந்த ஏரியை நம்பி சுமார் 1000 ஏக்கர் நிலங்கள் விவசாயசாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த பெரிய ஏரி தற்போது பெய்த மழையின் காரணமாக நிரம்பியுள்ளது. இதனை நம்பி விவசாயம் செய்யும் விவசாயிகள் ஒன்றிணைந்து இன்றுமடை திறக்கும் நிகழ்ச்சி நடத்தினர். ஆதனூர் புனித அன்னாள் தேவாலயத்தின் பங்குதந்தை அருட்திரு, ஆரோக்கியசாமிதுரை அடிகளார் மந்திரித்து மடையினை திறந்து வைத்தார். கிராம மேல்மட்ட குழுதலைவர் கி. அருள்நாயகம், கிராம தலைவர் ஐ.மான்சிங், செயலாளர் சி. சின்னசவரி, பொருளாளர் ரயில்வே,அ. அன்பானந்தம், துனைத்தலைவர் அ. அந்தோணிசெல்வராஜ் , வி.மைல்கேல்ராஜ், எஸ்.மரியசவரிநாதன், நாம் தமிழர் நகரபொறுப்பாளர் செ.ஆனந்தராஜ், சந்தியாகு உள்ளிட்ட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
பேராவூரணி செய்தியாளர் த.நீலகண்டன்
No comments:
Post a Comment