கும்பகோணத்தில் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம்,அரசினர் மகளிர் கல்லூரி லியோ சங்கம் , தஞ்சைமாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் அரவிந்த் கண் மருத்துவமனையுடன் ஆகிய இணைந்து நடத்தும் கும்பகோணம் இன்டெக்ரேடட் எண்டர்பிரைசஸ் (இந்தியா) லிட் உரிமையாளர் வைத்தியநாதன் நிதி உதவியுடன் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை சரஸ்வதி பாடசாலையில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம் சார்பில் நடந்த இலவச கண் சிகிச்சை முகாமை சங்கத் தலைவர் லயன் Er டி. பாலகிருஷ்ணன் தலைமை வகித்து துவக்கி வைத்தார்.
வட்டார தலைவர் லயன் எஸ்.மோகன் முன்னாள் தலைவர்கள் லயன் லட்சுமி நாராயணன், லயன் பரதன் எல் ஐ சி கே ஆர் .அசோகன், மற்றும் பெரும்பாலான உறுப்பினர்கள் கலந்து கொண்டு சேவை செய்தார்கள்
அரசு மகளிர் கல்லூரி லியோ சங்கத்தின் தலைவர் அபர்ணா செயலாளர் ராஜஜேஸ்வரி பொருளாளர் பத்மாவதி,மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சேவை பணியை சிறப்பாக செய்தார்கள்
அரவிந்த் கண் மருத்துவமனை சிறப்பு மருத்துவ நிபுணா்கள் பங்கேற்று பொது மக்களுக்கு கண்களை பரிசோதித்தனா். நகரப்புற கிராமப்புற பொது மக்கள் சேர்ந்த சேர்ந்த 336 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 160 பேர் கண் புரை கண்டறியப்பட்ட நோயாளிகள் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். அவா்களுக்கு உள்விழி லென்ஸ், அறுவைச் சிகிச்சை, மருந்து, தங்கும் வசதி, உணவு, போக்குவரத்து உள்ளிட்டவை இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டன.
முகாமிற்கான ஏற்பாடுகளை செயலாளர் Er எஸ் ஆர் முரளி, பொருளாளர் வி செல்வமணி ஆகியோர் செய்திருந்தனர்
No comments:
Post a Comment