கடை வாடகைத்தொகைக்கு ஜிஎஸ்டி,18% வசூலிக்கும் மத்திய அரசின் உத்தரவிற்கு வணிகர்கள் எதிர்ப்பு.
தஞ்சாவூர் :தஞ்சை மாவட்ட வணிகர் சங்க பேரவையின் அவசர ஆலோசனைக் கூட்டம், மாவட்ட அலுவலகத்தில் திங்கட்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு வணிகர் சங்க பேரவையினுடைய நிறுவனரும், தலைவருமான,பி.ராஜா சீனிவாசன் தலைமை தாங்கினார், மாவட்ட செயலாளர்,H. அப்துல் நசீர், மாவட்ட பொருளாளர்,டி. ராஜா, நகரத் தலைவர்,பி.சதீஷ், கௌரவத்தலைவர் காசி.பாண்டியன், துணைத் தலைவர்கள்,ஏ. முகமது மசூத்,எ.ஜே. அப்துல்லா,என். ராஜா மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வைத்தனர். நடைபெற்ற அவசர ஆலோசனை கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன: மத்திய நிதி அமைச்சர்,திருமதி. நிர்மலா சீதாராமன் தலைமையிலான, ஜிஎஸ்டி கவுன்சில்,23.9.2024- அன்று புதிதாக கடை வாடகைக்கு,18% வரி விதித்துள்ளதை ரத்து செய்ய வலியுறுத்தி, இந்தக் கூட்டத்தின் வாயிலாக மத்திய அரசை கேட்டுக்
கொள்வதோடு, வணிகர்களின் சார்பில், கடுமையான கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இந்த நவம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வந்துள்ள, ஜிஎஸ்டி விதிகளின்படி, சொந்த இடத்தில் வணிகம் நடத்தும் பெரும் வர்த்தக நிறுவனங்கள் (கார்பரேட்) இந்த,18% ஜிஎஸ்டி வரியை செலுத்த தேவையில்லை
எனவும், சொந்த இடம் வாங்க வசதி இல்லாத வாடகை இடத்தில் கடை நடத்திவிடும் ஒவ்வொரு சிறு வணிகரும் கடைக்கு செலுத்தும் வாடகை தொகையில்,18% தொகையை மாதந்தோறும் அரசுக்கு வரியாக செலுத்தியாக வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு கார்பரேட் முதலாளிகளுக்கு சாதகமாக எடுக்கப்பட்ட முடிவு. இது சில்லறை வணிகத்தை அழிக்க முயற்சிக்கும் சதி என்பதில் சந்தேகமில்லை. எங்களைப்போன்ற லட்சக்கணக்கான சில்லரைக் கடைகளை அழித்து விட்டு, கார்ப்பரேட் நிறுவனங்களை வளர்த்துவிடும் மத்திய அரசின்இச்செயல் மிகவும் கண்டனத்திற்குரியது. சலுகை தர வேண்டும் என்றால் சிறு வியாபாரிகளுக்கு தர வேண்டுமே தவிர,பெரு முதலாளிகளுக்கு தரக்கூடாது என்பதுதான் நியாயமான நிலைப்பாடாக இருக்க முடியும். ஆகவே உடனே மத்திய அரசு இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என, வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றோம். ஆகவே இதனைமத்திய அரசு ரத்து செய்ய தவறினால், அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் ஒத்துழைப்போடு, மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்திடவும், வணிகர்களை காக்க தீர்வு ஏற்படும் வரை தொடர்ந்து போராடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
No comments:
Post a Comment