தஞ்சையில் தமிழக நாட்டுப்புற இசைக்கலைப் பெரு மன்றத்தின் மாநில செயற்குழு கூட்டம்
தஞ்சாவூர் தமிழக நாட்டுப்புற இசைக்கலைப் பெரு மன்றத்தின் மாநில செயற்குழு கூட்டம் நேற்று மிகச் சிறப்பாக நடைபெற்றது
இவ்விழாவில் மாநில கவுரவத் தலைவர் த கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார் .மாநில பொதுச் செயலாளர் கருங்குயில் கணேஷ் அனைவரையும் வரவேற்றார் . நிகழ்த்த, மாநில துணைத்தலைவர் திருக்காட்டுப்பள்ளி சுப்பிரமணியம் அவர்களும் மாநில அமைப்பு செயலாளர் நெல்லை சுபாஷ் சந்திர போஸ் அவர்களும் பொருளாளர் ஆலம்பாடி பாஸ்கர் அவர்களும் துணை பொதுச்செயலாளர் திருப்பத்தூரான் சேவியர் அவர்களும், இசையரசி கிடாக்குழி மாரியம்மாள் அவர்களும் கலந்து கொண்ட கூட்டத்தில்,
ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளும் தத்தம் கருத்துகளை பதிவு செய்தனர்.
வீரியமான கேள்விகள் காரசாரமான விவாதங்கள் அனுபவிக்க விவரமான பதில்கள் இப்படி சிறப்பாக நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் மாநில தலைவர் நிறுவனர் கவிஞர் வளப்பக்குடி வீர சங்கர் அவர்கள் தலைமை உரை ஆற்றினார்.
மேலும் எதிர்வரும் நவம்பர் 23 அல்லது 24 தஞ்சையில் வெள்ளி விழா மாநாடு நடத்துவது குறித்தும் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்பட்டது.
தஞ்சை, திருவாரூர், நாகை, மாயவரம் ஆகிய மாவட்டங்களின் ஒருங்கிணைப்பு தலைவராக நாகை அன்பு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மாநில மகளிர் அணி புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டது.
வருகை தந்த அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி மகிழ்விக்கபட்டது.
மதிய உணவு முடிந்த பின்னர் தஞ்சை மாவட்ட நிர்வாகிகளோடு கலந்து ஆலோசித்து மாநில மாநாடு குறித்து சிறந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதற்கான அனைத்து சிறப்பு ஏற்பாடுகளையும் விஜி ஆடியோஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.
No comments:
Post a Comment