சேதுபாவாசத்திரம் ஆசிரியைக்கு நல்லாசிரியர் விருது
பேராவூரணி, செப்.7 சேதுபாவாசத்திரம் ஆசிரியைக்கு சென்னையில் நடைபெற்ற விழாவில் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், கழுமங்குடா ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் கி.ஷஜிதா. இவர் தமிழ்நாடு அரசின் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், செப்.5 வியாழக்கிழமை சென்னையில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் தலைமை ஆசிரியை கி. ஷஜிதாவுக்கு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழ்நாடு அரசின் டாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்கான சான்றிதழ் மற்றும் பதக்கத்தை வழங்கினார்.
நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியை ஷஜிதாவை சேதுபாவாசத்திரம் வட்டாரக் கல்வி அலுவலர் எஸ்.சிவசாமி, எம்.கே.ராமமூர்த்தி மற்றும் சக ஆசிரியர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.
பேராவூரணி செய்தியாளர் த.நீலகண்டன்
No comments:
Post a Comment