சரபேந்திரராஜன் பட்டினம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்
தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், சரபேந்திரராஜன்பட்டினம் தனியார் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு, பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து குத்து விளக்கேற்றி, முகாமைத் தொடங்கி வைத்து அரசுத் திட்டங்கள் குறித்து சிறப்புரையாற்றினார்.
சேதுபாவாசத்திரம் ஒன்றியப் பெருந்தலைவர் மு.கி.முத்துமாணிக்கம் முன்னிலை வகித்தார்.
முகாமில், மீன்வளத்துறை சார்பில், தலா ரூ.75 ஆயிரம் மதிப்பிலான, குளிர்சாதனப் பெட்டியுடன் கூடிய இருசக்கர வாகனம், 10 மீனவர் பயனாளிகளுக்கு ரூ.7.5 லட்சம் மதிப்பீட்டில் சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் வழங்கினார். விழாவில், தேசிய கீதம் பாடிய அரசுப் பள்ளி மாணவிகள் 4 பேருக்கு தனது சொந்தச் செலவில் புத்தகப்பை வழங்கினார்.
இதில், மாவட்ட உதவித் திட்ட அலுவலர் பத்மஜோதி, மீன்வளத்துறை உதவி இயக்குநர் மணிகண்டன், வட்டாட்சியர்கள் த.சுகுமார் (பட்டுக்கோட்டை), இரா.தெய்வானை (பேராவூரணி), வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாகேந்திரன், சடையப்பன், தமிழ்நாடு மீனவர் நல வாரிய துணைத் தலைவர் மல்லிப்பட்டினம் தாஜுதீன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சுவாதி காமராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சாகுல்ஹமீது, பாமா செந்தில்நாதன், அமுதா ராஜேந்திரன், சரபேந்திரராஜன்பட்டினம், புதுப்பட்டினம், சேதுபாவாசத்திரம், கொள்ளுக்காடு, மரக்காவலசை, ராவுத்தன்வயல் ஊராட்சி மன்றத் தலைவர்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள், மக்கள் பிரதிநிதிகள், கிராம பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில், நூற்றுக்கணக்கான கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் அரசு அலுவலர்களிடம் வழங்கினர்.
பேராவூரணி செய்தியாளர் த.நீலகண்டன்
No comments:
Post a Comment