இலவச பொது மருத்துவ முகாம்
பேராவூரணி தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் ஸ்டார் லயன்ஸ் சங்கம், தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை, பேராவூரணி ஸ்ரீ விநாயகா ஜுவல்லர்ஸ், நாடியம் ஊராட்சி மன்றம் ஆகியவை இணைந்து நடத்திய இலவச பொது மருத்துவ முகாம் நாடியம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நாடியம் ஊராட்சி மன்ற தலைவர் பிரேம்செல்வன் தலைமை தாங்கினார். பேராவூரணி ஸ்ரீ விநாயகா ஜுவல்லர்ஸ் உரிமையாளர் E.V. சந்திரமோகன், பேராவூரணி ஸ்டார் லயன்ஸ் சங்க தலைவர் பன்னீர்செல்வம், செயலாளர் ஆதித்யன், பொருளாளர் சாமியப்பன் , நிர்வாக அலுவலர் இராமநாதன், சாசன உறுப்பினர்கள் முருகானந்தம், ராம்குமார், நரேஷ்குமார் மற்றும் ஊராட்சி செயலாளர் நீலகண்டன், கணினி ஆப்ரேட்டர் நதியா மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இந்த முகாமில் உடல் எடை, உடல் ரத்த அழுத்தம், இரத்தத்தில் சர்க்கரை அளவு ஈ,சி,ஜி ஆகிய பரிசோதனைகள் செய்யப்பட்டது மொத்தம் 259 நபர்களுக்கு செய்யப்பட்டது.
பேராவூரணி செய்தியாளர் த.நீலகண்டன்
No comments:
Post a Comment