பேரறிஞர் அண்ணா 116வது பிறந்த நாள் பொதுக் கூட்டம்.
தஞ்சை மாவட்டம் பேராவூரணி காந்தி பூங்கா அருகில் அ.தி.மு.க சட்டமன்றத் தொகுதி சார்பில் பேரறிஞர் பெருந்தகை முன்னாள் முதல்வர் அண்ணா 116 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தஞ்சை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் சி.வி.சேகர் தலைமை வகித்தார். திருவோணம் தெற்கு ஒன்றிய செயலாளர் மதியழகன், பேராவூரணி வடக்கு ஒன்றிய செயலாளர் உ.துரைமாணிக்கம், பேராவூரணி தெற்கு ஒன்றிய செயலாளர் கோவி.இளங்கோ, பட்டுக்கோட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் மலை.முருகேசன், பேராவூரணி ஒன்றிய பெருந்தலைவர் சசிகலா ரவிசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராவூரணி அதிமுக நகர செயலாளர் எம் எஸ் நீலகண்டன் வரவேற்று பேசினார்.
மாநில விவசாய பிரிவு இணைச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மா. கோவிந்தராசு, தஞ்சை தெற்கு மாவட்ட அதிமுக அவைத் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திருஞானசம்பந்தம், மாநில எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் மலை அய்யன்,மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் ஜவகர் பாபு, மாநில இலக்கிய அணி இணை செயலாளர் சின்ன சாமிநாதன், மாநில கயிறு வாரிய முன்னாள் தலைவர் எஸ்.நீலகண்டன், மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட மாணவரணி துணை செயலாளர் எஸ்.எம்.நீலகண்டன், முன்னாள் தொகுதி இணை செயலாளர் பழனிச்சாமி, மாவட்ட எம் ஜி ஆர் மன்ற இணை செயலாளர் ராமமூர்த்தி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணைத் தலைவர் சத்யராஜா, ஒன்றிய அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செல்வகுமார், பாசறை செயலாளர் திருப்பதி, ஜெயகோபால் உள்ளிட்ட மாநில, மாவட்ட , ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தலைமை கழக பேச்சாளர்கள் பேராவூரணி திலீபன், இசை முரசு ராமகிருஷ்ணன் ஆகியோர் திமுக அரசின் திட்டங்களால் பொதுமக்கள் அவதிப்படுவது குறித்தும், மது மற்றும் போதை பொருள் விற்பனை செய்யப்படுவதால் கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக கூறினர். நிறைவாக சேதுபாவாசத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளர் அருணாச்சலம் நன்றி கூறினார்.
பேராவூரணி செய்தியாளர் த.நீலகண்டன்
No comments:
Post a Comment