பேராவூரணி ஸ்டார் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் அரசு மருத்துவமனையில் தினந்தோறும் இரவு உணவு வழங்கல்
பேராவூரணி செப் - 20 தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் ஸ்டார் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் தினம்தோறும் இரவு உணவு வழங்கும் திட்டம் பேராவூரணி அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு இரண்டு மாதங்களாக தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு உறுப்பினரும் ஒவ்வொரு நாளுக்கான இரவு உணவுக்கான செலவை ஏற்றுக் கொண்டு நோ யாழிகளுக்கு வழங்குகின்றனர். நேற்று இரவு உணவு வழங்கியவர் ஸ்டார் லயன்ஸ் சங்கத்தின் உறுப்பினர் வழக்கறிஞர் ஏகாம்பரம். இந்த நிகழ்வில் பேராவூரணி ஸ்டார் லயன்ஸ் சங்கத்தின் சாசன தலைவர் பன்னீர்செல்வம், நிர்வாக அலுவலர் இராமநாதன், சாசன உறுப்பினர்கள் ஜெயகாந்தி, இளங்கோவன், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த நிகழ்வில் 50 பயனாளிகளுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது.
பேராவூரணி செய்தியாளர் த. நீலகண்டன்
No comments:
Post a Comment