மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டி வழங்கும் விழா
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்றத் உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, மாற்றுத்திறனாளிகள் 26 பேருக்கு, சுமார் ரூ.26 லட்சம் மதிப்பிலான, மூன்று சக்கர வாகனம் (ஸ்கூட்டி) வழங்கும் விழா, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது.
பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கு.ஜெயஸ்ரீ கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டி வழங்கி சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில், வட்டாட்சியர் இரா.தெய்வானை, மாவட்ட அவைத்தலைவர் சுப.சேகர், ஒன்றியச் செயலாளர்கள் வை.ரவிச்சந்திரன், கோ.இளங்கோவன், சோம.கண்ணப்பன், நகரச் செயலாளர்கள் என்.எஸ்.சேகர், ஆர்.மாரிமுத்து, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சுவாதி காமராஜ், வழக்கறிஞர் குழ செ.அருள் நம்பி, பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத், பல்நோக்கு மறுவாழ்வு அலுவலர் முருகேஸ்வரி, மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்ட துணைத்தலைவர் மேனகா, நெற்கதிர் மாற்றுத்திறனாளிகள் சங்கம் பகாத் அகமது மற்றும் பேரூராட்சி துணைத்தலைவர் கி.ரெ.பழனிவேல், பேரூராட்சி உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள், பயனாளிகள் கலந்து கொண்டனர்.
பேராவூரணி செய்தியாளர் த.நீலகண்டன்
No comments:
Post a Comment