இவ்விழாவில் முதல் நாளான பல விதமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதில் ஒரு பகுதியாக காசாவயல் குமார் அவர்கள் பாடிய கொரோன விழிப்புணர்வு பாடல்களுக்கு மானஸா அகாடமி சார்பாகவும் தனலட்சுமி மற்றும் ராணி சர்மிளா, ஆகியோர் மாணவிகளை தயார் செய்து நடன பயிற்சி கற்று கொடுத்தனர். மாணவிகள் நடனம் ஆடி தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார், இதில் கலந்து கொண்ட அனைத்து சிறுமிகளையும் பாராட்டினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம், மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன் (திருவையாறு), டி.கே.ஜி. நீலமேகம் (தஞ்சாவூா்), மேயா்கள் சண். ராமநாதன் (தஞ்சாவூா்), க. சரவணன் (கும்பகோணம்), (தஞ்சாவூர் ) துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி .பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை இயக்குநா் தி.சி. செல்வவிநாயகம், கூடுதல் இயக்குநா் ப. சம்பத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
No comments:
Post a Comment