உலக மருந்தாளுநர்கள் தின விழா விழிப்புணர்வு பேரணி
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டம் ,ஆவணம் டாக்டர் கலாம் பார்மசி கல்லூரி மாணவர்கள் சார்பில் இன்று. மருந்தாளர்கள் தினத்தன்று விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.பேரணியில் மருந்துகளை எப்படி சாப்பிட வேண்டும். மருந்துகளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை விளக்கும் விதமாக இந்த விழிப்புணர்வு பேரணி பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து நீலகண்டபிள்ளையார் கோவில் வரை நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணிக்கு சிறப்பு அழைப்பாளராக பட்டுக்கோட்டை முன்னாள் நகர் மன்ற தலைவர் எஸ் ஆர் ஜவகர் பாபு அவர்கள் கலந்துக் கொண்டுகொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். இவ்விழாவில் பேராவூரணி காவல்துறை துணை ஆய்வாளர் புகழேந்தி அவர்கள் கலந்து கொண்டு பேரணிக்கான விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தினை அறிமுகம் செய்து வழங்கினார். விழிப்புணர்வு பேரணியில் டாக்டர் கலாம் பார்மசி கல்லூரியின் முதல்வர் அன்பழகன் மற்றும் துணை முதல்வர் பரிமளா தேவி. மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் மதிவாணன் மற்றும் பார்மசி கல்லூரியின் துறை தலைவர்கள் . மாணவ மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேராவூரணி செய்தியாளர் த.நீலகண்டன்
No comments:
Post a Comment