பேராவூரணி காவல் நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் பாஜக பொறுப்பாளர் எச் ராஜா மீது புகார் மனு
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி காவல் நிலையத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான கொலை மிரட்டல் மற்றும் அவர் செயல்பாட்டை முடக்கும் விதமாக அவரை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு பாஜக பொறுப்பு குழு தலைவர் எச். ராஜா .உத்தரப்பிரதேசம் மாநில அமைச்சர் ரகுராஜ் சிங் .ரயில்வே இணை அமைச்சர் ரவ்னித் பிட் .பாஜக தலைவர் தர்வின் சிங் மர்வா. மற்றும் சஞ்சய் கெய்க்வாட் எம்எல்ஏ இவர்கள் மக்களிடையே பகை உணர்வை ஏற்படுத்தும் வகையில் பேசியதை கண்டித்து தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வட்டார தலைவர் இளங்கோ .நகரத் தலைவர் நடராஜன்.நகர செயலாளர் பெத்தையன், வட்ட செயலாளர் நாகராஜன். சேதுபாவாசத்திரம் வடக்கு வட்டாரத் தலைவர் ஷேக் இப்ராம்ஷா . மந்திரி பட்டினம் நாகூர் கனி, முகமது இத்ரீஸ் . செந்தலைப்பட்டினம் கலீல் ரகுமான். அம்மனிசத்திரம் ராஜன். படப்பனார் வயல் பன்னீர்செல்வம். பழனிவேல் ஆகியோர் இணைந்து பேராவூரணி காவல் ஆய்வாளர் பசுபதி அவர்களிடம் நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனுஅளித்தனர்
பேராவூரணி செய்தியாளர் த.நீலகண்டன்
No comments:
Post a Comment