பேராவூரணி அரசுப் பள்ளிக்கு ரூ.31 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கட்டடம் திறப்பு
பேராவூரணி, செப்.21 தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி, பேராவூரணி மேற்கு ஊராட்சி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிக்கு புதிய இரு வகுப்பறைகள் கொண்ட கட்டடம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.31 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.
இதனை, பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து, திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி வாழ்த்திப் பேசினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் (பட்டுக்கோட்டை கல்வி மாவட்டம்) வ.மதியழகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மா.சாமிநாதன், செல்வேந்திரன், வட்டாரக் கல்வி அலுவலர் கலா ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேரூராட்சி தலைவர் சாந்தி சேகர், திமுக ஒன்றியச் செயலாளர் க.அன்பழகன், நகரச் செயலாளர் என்.எஸ்.சேகர், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் செல்வகுமார், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், கிராம பிரமுகர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, பள்ளித் தலைமை ஆசிரியர் விஜயலெட்சுமி வரவேற்றார். நிறைவாக, பள்ளி ஆசிரியர் ரஞ்சித்குமார் நன்றி கூறினார்.
பள்ளிக் கட்டடம் பழுதடைந்த நிலையில், மழைக்காலங்களில் குழந்தைகள் வகுப்பறையில் அமர்ந்து படிக்க முடியாமல் சிரமப்பட்டு வந்த நிலையில் மாணவர்கள், பெற்றோர்கள் கோரிக்கையை ஏற்று வகுப்பறை கட்டடத்திற்கு சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் நிதி ஒதுக்கீடு செய்தது குறிப்பிடத்தக்கது.
பேராவூரணி செய்தியாளர் த.நீலகண்டன்
No comments:
Post a Comment