பேராவூரணி ரயில் நிலையத்தில் செகந்திராபாத் - ராமேஸ்வரம் விரைவு ரயில் ஒரு நிமிடம் நின்று சென்றது.பொதுமக்கள், ரயில் பயணிகள் மகிழ்ச்சி.
பேராவூரணி - பட்டுக்கோட்டை வழித்தடத்தில் செகந்திராபாத் - ராமேஸ்வரம் விரைவு ரயில் கடந்த சில மாதங்களாக சென்று வரும் நிலையில், பேராவூரணி ரயில் நிலையத்தில் மட்டும் இந்த ரயில் நிற்காமல் சென்றது.
இதையடுத்து பேராவூரணி பொதுமக்கள், வர்த்தக சங்கம், ரயில் பயணிகள் சங்கம், அரிமா சங்கம், ரோட்டரி சங்கம் என பல்வேறு அமைப்புகள் ரயில்வே துறைக்கு கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் பேராவூரணி எம்எல்ஏ அசோக்குமாரின் முன்முயற்சியில், தஞ்சை நாடாளுமன்ற எம்பி முரசொலியிடம் கோரிக்கை வைத்ததன் பேரில், தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி தீவிர முயற்சியில் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ், மற்றும் ரயில்வே உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்துப் பேசினார். விரைவு ரயில் பேராவூரணி ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்ல அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதன் அடிப்படையில் நேற்று இரவு 7:40 மணியளவில் செகந்திராபாத் - ராமேஸ்வரம் செல்லும் வழியில் பேராவூரணி ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் ரயில் நின்று சென்றது. இந்த ரயிலை வரவேற்ற பொதுமக்கள், ரயில் பயணிகள், ரயில் உபயோகிப்பாளர் சங்கம் மற்றும் அரிமா, ரோட்டரி வர்த்தக சங்க அமைப்பினார்கள் மகிழ்ச்சி தெரிவித்து ரயிலை வரவேற்றனர்.
ரயிலை இயக்கிய ஓட்டுநருக்கு திமுக நாடாளுமன்ற முரசொலி, பேராவூரணி எம்எல்ஏ அசோக்குமார் தலைமையில் வரவேற்று பொன்னாடை அணிவித்து இனிப்புகள் வழங்கினர்,
இந்த நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர்கள், அனைத்து கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் வரவேற்று ரயிலை வழியனுப்பி வைத்தனர்.
பேராவூரணி செய்தியாளர் த.நீலகண்டன்
No comments:
Post a Comment