சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் புதிய கட்டடங்கள்... எம்எல்ஏ அசோக்குமார் திறந்து வைத்தார்.
பேராவூரணி, தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், முடச்சிக்காடு ஊராட்சி, பூக்கொல்லை ஆதிசக்தி விநாயகர் கோயில் விழா மேடை ரூ.10.5 லட்சம் மதிப்பீட்டிலும், பள்ளத்தூர் ஊராட்சி கதலிவனேஸ்வரர் கோவில் விழா மேடை ரூ.10 லட்சம் மதிப்பீட்டிலும், ஆண்டிக்காடு ஊராட்சி பொது விநியோகத் திட்ட கட்டடம் ரூ.9.18 லட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.29 லட்சத்து 23 ஆயிரம் மதிப்பீட்டில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இதனை, சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மு.கி.முத்துமாணிக்கம் முன்னிலையில், பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து, ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்து விளக்கேற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். நிகழ்வில், ஆண்டிக்காடு ஊராட்சியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில், திமுக சேதுபாவாசத்திரம் தெற்கு ஒன்றியச் செயலாளர் வை.ரவிச்சந்திரன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சுவாதி காமராஜ், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் அ.அப்துல் மஜீத், தனபால், வட்டார வளர்ச்சி அலுவலர் நாகேந்திரன், சடையப்பன், ஒன்றியப் பொறியாளர் மணிமேகலை, ஒன்றியக்குழு துணைத் தலைவர் முத்துலட்சுமி காளிமுத்து, ஊராட்சி மன்றத் தலைவர்கள் சி.சக்ரவர்த்தி (முடச்சிக்காடு), மா. வரதராஜன் (ஆண்டிக்காடு), ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பேராவூரணி செய்தியாளர் த.நீலகண்டன்
No comments:
Post a Comment