அருள்மிகு லெட்சுமி நரசிம்மர், அருள்மிகு வாராகி அம்மன் திருக்கோவில்கள் கும்பாபிஷேகப் பெருவிழா
பேராவூரணி தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டம், வாத்தலைக்காடு கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு கற்பக விநாயகர், அருள்மிகு சர்வசித்தி ஆஞ்சநேயர், அருள்மிகு நவக்கிரக திருக்கோயில் வளாகப் பகுதியில், அருள்மிகு லெட்சுமி நரசிம்மர், அருள்மிகு வாராகி அம்மன் திருக்கோவில்கள் பெருஞ்சாந்தி திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா (அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்) இன்று (வெள்ளிக்கிழமை) காலை நடைபெற்றது.
திருக்குடமுழுக்கு விழாவை ஸ்ரீலஸ்ரீ ஜோதிமலை இறைப்பணி மன்ற கூட்டத் தலைவர் திருவடிக்குடில் சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது. இதையொட்டி மங்கல இசை, திரு வழிபாடு, பிள்ளையார் வழிபாடு, நவக்கிரம ஓமங்கள், திருக்குடங்கள் புறப்பாடு நடைபெற்றது.
தொடர்ந்து காலை விமான கலசங்கள் திருக்குடமுழுக்கு நன்னீராட்டுதல் மகா கும்பாபிஷேகம்) மகாதீபம் காட்டுதல் நடைபெற்றது.
இதில் வாதலைக்காடு சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் புனித நீர் தெளிக்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை வாத்தலைக்காடு கிராமத்தார்கள் செய்திருந்தனர்.
பேராவூரணி செய்தியாளர் த.நீலகண்டன்
No comments:
Post a Comment