அதிமுக உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா.
பேராவூரணி ஆக 28 தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் வடக்கு ஒன்றிய அதிமுக உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமாகிய சி.வி.சேகர் தலைமையில் கட்டயங்காடு கிராமத்தில் நடைபெற்றது.தஞ்சை தெற்கு மாவட்ட அவைத் தலைவர் திருஞானசம்பந்தம் முன்னிலையில் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டது.நிகழ்வில் முன்னாள் கயிறு வாரிய தலைவர் எஸ்.நீலகண்டன், சேதுபாவாசத்திரம் வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் மீனவராஜன், ஒன்றிய கவுன்சிலர் கவிதா செல்வக்குமார், மாவட்ட பிரதிநிதி கூத்தலிங்கம், ஒன்றிய இளைஞர் அணி வினோத், ஒன்றிய அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர் செல்வகுமார், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் செல்வக்கிளி, விவசாய அணி ராமசாமி மற்றும் வீராச்சாமி, திருமலைவாசன் உள்ளிட்ட ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பேராவூரணி செய்தியாளர் த.நீலகண்டன்
No comments:
Post a Comment