அன்னை தெரேசா பிறந்தநாள் தினம்
பேராவூரணி தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே அன்னை தெரேசா பிறந்த தினத்தை முன்னிட்டு பனஞ்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பேராவூரணி ஸ்டார் லயன்ஸ் சங்கத்தின் மூலம் அன்னை தெரேசாவின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் பேராவூரணி ஸ்டார் லயன்ஸ் சங்க தலைவர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டு அன்னை தெரேசாவின் வாழ்க்கை வரலாற்றையும் அவர் ஆற்றிய சமுதாயப் பணியையும் மாணவர்களுக்கு விளக்கி கூறினார். மேலும் பள்ளி மாணவர்களுக்கு அன்னை தெரேசா குறித்த காணொளி திரையிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் வீர சந்திரசேகரன், கல்வியாளர் ஞானசேகரன், ஸ்டார் லயன்ஸ் சங்க உறுப்பினர்கள் தமிழ்ச்செல்வன், இளையராஜா, ராமநாதன், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்
பேராவூரணி செய்தியாளர் த.நீலகண்டன்
No comments:
Post a Comment