கண் தானம் கும்பகோணம் இறந்த கலைச்செல்வியின் கண்களை தானமாக வழங்கினர்
கும்பகோணம் சாரங்கபாணி கீழ்மடவிளாகத்தில் சேர்ந்த சக்திவேல் மனைவி கலைச்செல்வி வயது 54 உடல்நல குறைவால் இறந்தார்"அவரது கண்களை தானமாக வழங்க அவரது கணவர் N.சக்திவேல் குடும்பத்தினருக்கு கண்தானம் எடுக்க உதவிய மற்றும் பெற்று தந்த கொத்தா .சுதர்சன், லயன் எல் டி சேதுமாதவன் ஆகியோர் கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கத்துக்கு தகவல் கொடுத்தனர். மதுரைஅரவிந்த் கண் மருத்துவமனை D. தமிழரசன் தலைமையிலான மருத்துவ குழுவினர் இறந்த கலைச்செல்வி யின் கண்களை தானமாக பெற்றனர்.
இதுவரை கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம் 3286 ஜோடி தானமாக பெற்று 6572 நபர்களுக்கு வாழ்வில் ஒளி ஏற்றியுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என தலைவர் லயன் ErT.பாலகிருஷ்ணன் செயலாளர் லயன் Er S.R முரளி ,பொருளாளர் V.செல்வமணி மற்றும உறுப்பினர்கள் ஏற்பாடு செய்து தகவலை தெரிவித்தனர். இருக்கும் வரை இரத்ததானம் செய்வோம் இறந்த பின் கண்தானம் செயவோம்
No comments:
Post a Comment