பயணியர் நிழலகத்தை சீரமைத்து புதுப்பித்த இளைஞர்கள்
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை அடுத்த அம்மையாண்டியில் பயணியர் பயன்படுத்த முடியாத நிலையில் பயணியர் நிழலகம் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்துள்ளது. மேலும் இரவு நேரங்களில் சில சமூக விரோதிகள் மற்றும் மதுபிரியர்கள் இந்த பயணியர் நிழலகத்தை தவறாக பயன்படுத்தி வந்துள்ளனர். மேலும் சிலர் அந்த பயணியர் நிழலகத்தினுல் அமர்ந்து மது அருந்தி விட்டு அங்கேயே பாட்டில்களை போட்டுவிட்டு சென்று விடுகின்றனர். இதனால் பஸ் ஏற வரும் பயணிகள் அந்த நிழலகத்தினுல் சென்று அமர முடியாமல் வெளியில் கொழுத்தும் வெயிலில் நின்று பஸ் ஏறி சென்று வந்துள்ளனர். இதனை கண்ட பேராவூரணி தன்னார்வ இளைஞர்கள் ஒன்றினைந்து அவர்களது சொந்த செலவில் அந்த பயணியர் நிழலகத்தை முற்றிலும் சீரமைத்து புதுப்பித்து இப்பகுதி மக்கள் பயன்படுத்தும் வகையில் மாற்றியுள்ளனர் இவர்களை இப்பகுதி மக்கள் பாராட்டினர்.
செய்தி: பேராவூரணி நீலகண்டன்
No comments:
Post a Comment