பிஜேபி மாநிலத் தலைவர் அண்ணாமலையின் சென்னையில் உள்ள வீட்டை முற்றுகையிடுவோம்: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி விவசாய பிரிவு மாநில செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் அறிவிப்பு - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday 11 July 2024

பிஜேபி மாநிலத் தலைவர் அண்ணாமலையின் சென்னையில் உள்ள வீட்டை முற்றுகையிடுவோம்: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி விவசாய பிரிவு மாநில செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் அறிவிப்பு

 


பிஜேபி மாநிலத் தலைவர் அண்ணாமலையின் சென்னையில் உள்ள வீட்டை முற்றுகையிடுவோம்: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி விவசாய பிரிவு மாநில செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் அறிவிப்பு



தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி விவசாய பிரிவு மாநில செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-



தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப் பெருந்தகை எம் எல் ஏ பொறுப்பேற்றது முதல் கட்சியின் வளர்ச்சிக்கு 24 மணி நேரமும் பாடுபட்டு வருகிறார். அவர் பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்பட காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட 10 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது தமிழ்நாட்டில் கூட்டணி கட்சிகள் 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற தமிழகம் முழுவதும் சூராவளி சுற்று பயணம் செய்து இந்திய பாராளுமன்ற தேர்தலில் எந்த கூட்டணி கட்சியும் பெற்றிடாத வெற்றியை பெறுவதற்கு காங்கிரஸ் கட்சியும் களப்பணி ஆற்றி முக்கியத்துவம் பெற்று உள்ளது. இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பேற்ற செல்வப் பெருந்தகை ஒருங்கிணைப்பு தலைமைப் பண்பு அரவணைத்துச் செல்லும் பாங்கு தமிழக காங்கிரஸ் தொண்டர்கள் அவர் மீது கொண்டிருந்த நம்பிக்கை தமிழக வாக்காளர்கள் அவருக்கு கொடுத்த உற்சாகம் ஆகியவை தான் காரணம் 



சாதாரண எளிய குடும்பத்தில் பிறந்து தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக தனது வாழ்வை அர்ப்பணித்து 24 மணி நேரமும் உழைத்து வரும் செல்வப்பெருந்தகையை பார்த்து எடுத்தோம் கவிழ்த்தோம் என்று அண்ணாமலை ஏக வசனத்தில் அவர் மீது குற்றம் சாட்டுவது எவரும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.அரசியல் பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் பொது வாழ்க்கையில் ஈடுபடும் பொழுது பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவதும் அவர்கள் மீது வழக்குகள் வருவதும் இயற்கையான ஒன்று.அதை சட்டப்படி நீதி மன்றங்களில் சந்தித்து நான் நிரபராதி என்று நிரூபித்து பொது வாழ்க்கையை தொடர்வது அரசியல் வாழ்க்கையை கவனித்து வரும் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் அரசியலில் புது சட்டையை போட்டிருக்கும் அண்ணாமலைக்கு அரசியல் வாழ்வின் அங்கம் வழக்குகள் என்பது தெரியாமல் போனது ஏனோ? 



அவரது கட்சியில் கிரிமினல் வழக்குகள் உள்ளவர்கள் எத்தனை பேர் வேட்பாளராக போட்டியிட்டார்கள் என்பதை கடந்த பாராளுமன்ற தேர்தலில் அனைத்து கட்சி தலைவர்களும் சுட்டிக் காட்டுவதை அவர் மறந்து விட்டார். குற்ற பின்னணி உள்ளவர்களை வேட்பாளராக அறிவித்ததால் தான் பாராளுமன்ற தேர்தலில் மெஜாரிட்டியை பிடிக்க முடியாமல் போன பாரதிய ஜனதா கட்சி தனது கூட்டணி கட்சிகளின் காலை பிடித்து ஆட்சி செய்து வருவதை அண்ணாமலை மறந்து விட்டார். முதலில் அவரது சொந்தக் கட்சியில் சொத்தைகள் எத்தனை என்பதை அவர் பார்க்கட்டும். அவர்களை அவர் நீக்கட்டும். 



இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதி நீண்ட அரசியல் அனுபவம் உள்ளவர் மக்கள் பணியில் தொடர்ந்து இருப்பவர் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களாலும் மதிக்க படுபவர் அனைத்து காங்கிரஸ் தொண்டர்களாலும் போற்றப்படுபவர் அவரை அண்ணாமலை அண்ணாந்து பார்த்து பாராட்டாமல் வேண்டுமானால் இருக்கலாம் அதனால் அவருக்கு எந்த குறைவும் இல்லை ஆனால் வாய்க்கு வந்ததை பேசி ஒவ்வொரு கட்சித் தலைவர்களிடமும் வாங்கி கட்டிக் கொள்ளும் அண்ணாமலை அதிமுக தலைவர்களை விமர்சிப்பதை விட்டு விட்டு இப்பொழுது காங்கிரசை கையில் எடுத்திருக்கிறார் அவருக்கு காங்கிரஸ் தொண்டர்கள் பாடம் புகட்ட தயாராகி விட்டார்கள் அவர் தனது கருத்தை இன்னும் பத்து நாட்களுக்குள் வாபஸ் பெற்று பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லை என்றால் தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலையின் சென்னையில் உள்ள வீட்டை தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் எனது தலைமையில் (ஆர்.எஸ்.ராஜன்) முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி அவரை வீட்டுக்குள் முடக்க நேரிடும் என்பதை எச்சரிக்கையுடன் கூறி கொள்கிறேன் என்றார்.

No comments:

Post a Comment

Post Top Ad