திருவையாறு ஔவை மழலையர் பள்ளியில் மாதிரிப் பாராளுமன்ற அமைச்சர்கள் பதவி ஏற்பு.
திருவையாறு ஔவை மழலையர் தொடக்கப்பள்ளியில் இளையோர் பாராளுமன்றம் செயல்பபட்டு வருகிறது. 2024-2025 கல்வி ஆண்டிற்கான இளையோர் பாராளுமன்ற அமைச்சர்களை தேர்தல் முறையில் கீழ்க்கண்ட அமைச்சர்கள் தேர்வு செய்யப்பட்டன.
பிரதம அமைச்சராக ரா. ஸ்ரீ கிருஷ்ணா, துணை பிரதம மந்திரியாக கவியாழினி, கல்வித்துறை அமைச்சராக அ. சத்ய ஸ்ரீ, துணை கல்வித்துறை அமைச்சராக சி. மைதிலி, உணவுத்துறை அமைச்சராக ஆ. சந்தோஷ், துணை உணவுத்துறை அமைச்சராக ச. வர்த்தினி ஸ்ரீ, சுகாதாரத்துறை அமைச்சராக ச. தனியரசு, துணை சுகாதாரத்துறை அமைச்சராக க. ஸ்ரீகரண் போக்குவரத்துத் துறை அமைச்சராக
ஆ. ஆரோக்கிய டையனா, கி.தருண். துணை போக்குவரத்துத் துறை அமைச்சராக அ. மெரினி,
ம. ஈஸ்வரி விளையாட்டுத்துறை அமைச்சராக விளையாட்டுத்துறை அமைச்சராக ர. உ. சாய் ருக்கிஷ், துணை விளையாட்டுத்துறை அமைச்சராக ம.மாதேஷ்வரன்.
ஆகியோர் பள்ளி மாணவி மாணவர்களால் தேர்தல் நடத்தப்பட்டு தேர்வு செய்யப்பட்டனர். தேர்தல் அலுவலர்களாக பள்ளி தலைமை ஆசிரியர் கோ. கோகிலா, உதவி தலைமை ஆசிரியர் இரா. தனலட்சுமி ஆகியோர் செயல்பட்டு தேர்தல் நடத்தப்பட்டது. பள்ளி தாளாளர் கண்ணகி கலைவேந்தன், பள்ளியின் இயக்குநர் கலை அருவி மற்றும் ஆசிரியர்களிடம் வாழ்த்துப் பெற்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்கள் அனைவரும் பள்ளியை தூய்மையாக வைத்துக் கொள்வதற்கும் பாதுகாப்பாக செயல்படுவதற்கும் உறுதி எடுத்துக் கொண்டனர்

No comments:
Post a Comment