உலக நன்மைக்காக கூட்டு பிரார்த்தனை
தேனி வீரபாண்டி சிவ யோகி பிரபு ஸ்ரீ அகத்தியர் குரு பீடத்தில் உலக நன்மைக்காக கூட்டு பிரார்த்தனையும் சிறப்பு சொற்பொழிவும் வெகு விமர்சையாக நடைபெற்றது .
இந்நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட ஹீலர் பாலமுருகன் மருந்தில்லா மருத்துவம் முகாமை நடத்தி சொற்பொழிவு ஆற்றினார்.
இதில் நீர் பற்றிய விழிப்புணர்வு உலக நன்மைக்காக உரை ஆற்றிய global UK scientist Deputy Director டாக்டர் உமா காந்தன் , அகத்தியர் பீடம் சிவயோகி பிரபு ஆகியோர்களின் கரங்களால் மருத்துவ சேவைக்கான விருதினை ஹீலர் பாலமுருகன் பெற்றுள்ளார்.
தொடர்ந்து இப் பிரார்த்தனையில் மக்கள் நலனுக்காக சுவாமி விவேகானந்தா யோகா தெரப்பி ஆராய்ச்சி மைய நிறுவனர் கின்னஸ் உலக சாதனையாளர் டாக்டர் ராம் சௌந்தர்ராஜ் டாக்டர் லட்சுமணன் சௌந்தர்ராஜ் யோகாவை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி உரையாற்றி செய்முறை விளக்கங்களை காட்டினார்
இப்படி எத்தனையோ மற்றும் காய்கறி வைத்தியர் ஹீலர் ஏ ஆர் கோபிநாத் காய்கறி வைத்தியம் மற்றும் உடல் நலம் பற்றிய கருத்துரையை எடுத்துக் கூறினார்
அகத்தியர் மெய்ஞான பீடம் மற்றும் போகர் ஹெர்பல் ஆராய்ச்சி மைய நிறுவனர் டாக்டர் தாமரைக் கண்ணா , வேதாந்திர மகரிஷி தஜெகதீஷ் ஐயா ஆசிரியர் கோபு பிரசன்னா ஆகியோர் பங்கேற்றி சிறப்புரையாற்றி நிகழ்ச்சியை செம்மையாக வழிநடத்தினார்கள்

No comments:
Post a Comment