திருவையாறு ஔவை மழலையர் தொடக்கப்பள்ளியில் திருமுறை இசைப்பயிலரங்கம் தொடக்கவிழா
திருவையாறு ஒளவை மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் திருமுறை பயிலரங்கமானது பள்ளித் தாளாளர் திருமதி கண்ணகி கலைவேந்தன் தலைமையில் நடைபெற்றது. ப திருவண்ணாமலை திருமூலர் ஆசிரமத்தலைவர் சுவாமி விஜயானந்தா சரசுவதி அடிகளார் இசைப் பயிலரங்கத்தை தொடங்கி வைத்து பள்ளி மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்கள். இசை ஆசிரியை செல்வி பிரம்ம வித்யா, திருமதி கௌரி ஆகியோர் மாணவர்களுக்கு திருமுறை இசைபயிற்சி அளித்தனர். சுவாமி விஜயானந்தா சரசுவதி அடிகளார் , சுவாமினி திவ்யானந்தா சரசுவதி அடிகளார் ஆகியோர்களுக்கு தமிழய்யா கல்விக்கழக நிறுவனர் முனைவர் மு.கலை வேந்தன் அவர்கள் திருபணிச்செம்மல் விருது " வழங்கிப் பாராட்டினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக திருச்சி ராதா நீலகண்டன், துபாய் நர்மதா, இராஜேஸ்வரி கண்ணபிரான் ஆகியோரை பள்ளி மாணவர்கள் இசையுடன் வரவேற்றனர். தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. முன்னதாக பள்ளித் தலைமை ஆசிரியை கோ.கோகிலா வரவேற்றார். நிறைவில் உதவித்தலைமை ஆசிரியை இரா. தனலெட்சுமி நன்றி கூறினார்.
அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளி ஆசிரியர்கள் பெஸ்கில்லா, வெர்ஜினியா, மஞ்சுளா, தீபா, சினேகா, பிரேமலதா, தெரஸா, நித்யா ஆகியோர் செய்திருந்தனர். விழாவிற்கு முன்னதாக ஔவை மூலவருக்கு சிறப்பு வழிபாடும், திருவள்ளுவர் சிலைக்கு மாலையும் அணிவிக்கப்பட்டது
No comments:
Post a Comment