நன்னிலத்தில் ஸ்ரீ மகா கோவிந்த சுவாமிகள் 33 வது ஆராதனை விழா,: - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday, 26 July 2024

நன்னிலத்தில் ஸ்ரீ மகா கோவிந்த சுவாமிகள் 33 வது ஆராதனை விழா,:

.com/img/a/

IMG-20240726-WA0340

 நன்னிலத்தில் ஸ்ரீ மகா கோவிந்த சுவாமிகள்  33 வது ஆராதனை விழா,:


திருவாரூர் மாவட்டம்  நன்னிலத்தில் ஸ்ரீ நாராயண தாண்டேவேசுவர ஆலயத்தில்  ஸ்ரீ மகா கோவிந்த சுவாமிகளின்  33 ஆம் ஆண்டு ஆராதனை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.


நன்னிலம் பிள்ளையார் கோவில் தெற்கு தெருவில் ஸ்ரீ நாராயண தாண்டேவேசுவர ஆலயத்தை கருங்கல் திருப்பணி செய்து 1968 கும்பாபிஷேகம் செய்த ஸ்ரீ குரு மகா கோவிந்த ஸ்வாமிகளுக்கு  நன்னிலம் பக்தர்கள் மற்றும் சென்னை, கைவல்ய நவநீத ஞானப்பெருமன்றம் ஆகிய இணைந்து நடத்தும் ஆராதனை விழா வெகு விமர்சையாக கைவல்ய நவநீத ஏக நாயகன் தியான மண்டபத்தில் நடைபெற்றது.

 

ஸ்ரீமத் மகா கோவிந்த  சுவாமிகளின் 33வது ஆராதனை விழாவில் .அவரது  குருவுக்கு ஸ்ரீ நாராயண தாண்டேவேசுவர அதிர்ஷ்டானத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம் நடந்தது.  இவரது 33வது ஆண்டு ஆராதனை விழாவை முன்னிட்டு, விழாவின் இன்று காலை 6:00 மணிக்கு கைவல்ய  நவநீதம்  முற்றோதல், நடந்தது தொடர்ந்து 8:00 மணிக்கு யாகேவேள்ளி பூர்ணாஹீதி குருநாதர்களுக்கு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.காலை 10:30 மணி அளவில் சுவாமிகளின் சத்சங்கம் அருளாசிகள் நடைபெற்றன. மதியம் 1.00 மணி அளவில் அன்னமளித்தல் பூஜை  நடைபெற்று பிறகு அன்னதானம் வழங்கப்பட்டது.


 மாலை 6:00 மணிக்கு  ஸ்ரீ நாராயண ஶ்ரீதாண்டவேசுவர சாமிகள் ஸ்ரீமத் மகா கோவிந்தசாமி   உருவம் தாங்கிய படங்களுடன்  எழுந்தருளி அதிர்ஷ்டான வளாகத்தில் வலம் வந்து நன்னிலம் சுற்றி  விநாயகர் கோவில், பேருந்து நிலையம், மாரியம்மன் கோவில்,காளியம்மன் கோவில்,கடை தெரு உள்ளிட்ட பல.முக்கிய விதிகளில்  உலா வந்தது ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்."


ஆராதனை விழா  ஓசூர், சின்மயா மிஷன்  சாஸ்வதானந்தா சுவாமிகள்,பொள்ளாச்சி தத்துவ ஞான சபை,,ஆத்ம போதகர், இல மனோகர் சுவாமிகள்,திருவையாறு


சித்தேஸ்வரி ஞானபீடம், சித்தேஸ்வரானந்தபுரி, மங்கை நல்லூர்,பூர்ணகேவனாந்தபுரி, நன்னிலம் க. ஞானசேகரன், வி. பாஸ்கரன்,பி ஜி உத்தமன், நாகர்கோவில், பிரம்மச்சாரி, நீலகண்டாம்ருத  சைதன்யா, ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .


இவ்விழாவை நன்னிலம் சுவாமி கோரக்ஸானந்தா  ஒருங்கிணைத்தனர். இந்நிகழ்ச்சியில் நன்னிலம் சாய் ஸ்போர்ட்ஸ் அகடாமியில் 30 நாள் பயிற்சி முகாமில் மாணவ மாணவிகளுக்கு பாராட்டுகளும் , சான்றிதழ்களும் கௌரவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad