கட்சியில் நீக்கப்பட்டவர்கள் சிவசேனா கொடியை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை-மாநிலத் தலைவர் அறிக்கை - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday 17 July 2024

கட்சியில் நீக்கப்பட்டவர்கள் சிவசேனா கொடியை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை-மாநிலத் தலைவர் அறிக்கை

 


கட்சியில்  நீக்கப்பட்டவர்கள் சிவசேனா  கொடியை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை-மாநிலத் தலைவர் அறிக்கை


கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் சிவ சேனா கட்சியின் கொடியை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிவசேனா மாநிலத்  தலைவர் SM.பாரதி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்


தமிழகத்தில் சில மாவட்டங்களில் தொடர்ந்து கட்சி விரோத செயல்பாடுகளில் சில நபர்கள் ஈடுபடுவதாகவும் கட்சியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் பரிந்துரைத்ததன் அடிப்படையில் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து மாநில மண்டல மாவட்ட பொறுப்பாளர்களின் ஒப்புதல் உடன் நீக்கப்பட்டு விட்டனர் 


சிவசேனா கட்சியுடன் எந்த வகையிலும் சம்பந்தமில்லாத நபர்கள் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகளுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள்


தமிழகத்தினுடைய அங்கீகரிக்கப்பட்ட மாநில தலைவர் SM.பாரதி அவர்களுக்கும் கட்சிக்கும் எதிராக அவதூறு பரப்புரைகளில் அந்த நபர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகும் அவர்கள் கட்சி பெயர் சின்னம் கொடியை பயன்படுத்துவதை  ஏற்க முடியாது. கட்சிக் கொடியை உடனடியாக காரிலிருந்து அகற்றாவிட்டால், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது


சிவசேனா கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களிலும், கட்சி விரோத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதற்காக கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்பட்ட நபர்களுடன் சிவசேனா கட்சியைச் சேர்ந்தவர்கள் இன்று முதல் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதை மீறி செயல்படுபவர்கள் மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். என கூறினார்

No comments:

Post a Comment

Post Top Ad