ஸ்ரீ காத்தாயி அம்மன் ஆலயத்தில் குத்து விளக்கு பூஜை: திரளான பெண்கள் பங்கேற்பு - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday 19 July 2024

ஸ்ரீ காத்தாயி அம்மன் ஆலயத்தில் குத்து விளக்கு பூஜை: திரளான பெண்கள் பங்கேற்பு


ஸ்ரீ காத்தாயி அம்மன் ஆலயத்தில் குத்து விளக்கு பூஜை: திரளான பெண்கள் பங்கேற்பு


கும்பகோணத்து புகழ்பெற்ற ஸ்ரீ காத்தாயி அம்மன் ஆலயத்தில் பிரம்மாண்டாக நடைபெற்ற குத்து விளக்கு பூஜையில்  200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.


தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள  பந்தடி மேடை தென்பாகத்தில்  பூர்விகமாய் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ காத்தாயி அம்மன் ஆலயத்தில்  ஆண்டுதோறும் ஆடி மாத முதல் வெள்ளிக் கிழமையில் பிரமாண்டமான முறையில் குத்துவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவில்  காத்தாயி அம்மன் சன்னதியில் மிகப்பெரிய அளவிலான குத்துவிளக்கு வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் அந்த விளக்கு கோயிலைச் சுற்றி எடுத்து வரப்பட்டு அருகிலுள்ள கலையரங்க மேடையில் வைக்கப்பட்டது. தொடர்ந்து குத்து விளக்கிற்கு அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு தீபம் ஏற்றப்பட்டது."குத்துவிளக்கில் தீபம் ஏற்றியதும் அங்கு கூடியிருந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள், தாங்கள் கொண்டு வந்திருந்த விளக்குகளில் தீபம் ஏற்றி, குங்குமம் அர்ச்சனை மற்றும் பூஜைகள் செய்து அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து அம்மனுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து மகரதீபாராதனை காட்டப்பட்டது."

No comments:

Post a Comment

Post Top Ad