2026 இல் தமிழக சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி ஒரு இடம் கூட பிடிக்காது; ஆர்.எஸ்.ராஜன் பேச்சு
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி விவசாய பிரிவு மாநில செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது:
சென்னையில் நடைபெற்ற தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய விவசாயத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தமிழகத்தில் விரைவில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியைப் பிடிக்கும் அப்போது தமிழக சட்டமன்றத்தில் செங்கோல் நிறுவப்படும் என்று அவரது நிறைவேறாத ஆசையை கூறியுள்ளார்.
தமிழக மக்களின் கலாச்சார பண்பாட்டையும் மனநிலையையும் தமிழர்களின் வரலாற்றையும் தெரியாமல் வந்த இடத்தில் அவர் பாரதிய ஜனதா கட்சியினரை மகிழ்ச்சியடைய செய்வது போல் பேசி தமிழக மக்களை திசை மாற்ற முயற்சி செய்கிறார் மேலும்
தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி வளர்ந்தது போன்ற மாய தோற்றத்தை உருவாக்கி அதன் மூலம் அக்கட்சி வளர்ச்சி அடைந்தது போல பிம்பத்தை தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியினர் பரப்பி வருவது தமிழக மக்களை தொடர்ந்து ஏமாளிகள் என அவர்கள் நினைப்பதையை காட்டுகிறது. கடந்த பல சட்டமன்றத் தேர்தல்களில் தனித்து போட்டியிட்டு ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாதவர்கள் அடுத்து 2026-ல் ஆட்சியை பிடிப்போம் என்று பேசுவது கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வைகுண்டத்தில் பறப்பது போல கனவு காண்பதாகும்.தமிழ்நாடு மக்கள் என்றும் ஒரு மத சாராரின் பிடியில் சிக்க மாட்டார்கள் தமிழகம் மதச்சார்பற்ற மண் ஆகும் இங்கே மதத்தின் பெயரால் மக்களை ஆள நினைப்பவர்கள் இது வரை தோற்று தான் போய் உள்ளார்கள். இனியும் தோற்க்கத்தான் போகிறார்கள். மேலும் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி வளரவில்லை என்பது ஊரறிந்த ஒன்று தற்போது இந்தியா முழுவதும் பாரதிய ஜனதா கட்சிக்கு சறுக்கல் ஏற்பட்டுள்ளது இதற்கு எடுத்துக்காட்டாக நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் மூலம் வெட்ட வெளிச்சமாகி உள்ளது தற்போது கூட்டணி கட்சிகளின் உதவியால் ஆட்சி செய்யும் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி கடைசி வரை கரை ஏறி செல்லுமா என்று உள்ள சூழ்நிலையில் தமிழ்நாட்டில் ஒரு பாராளுமன்ற தொகுதியில் கூட வெற்றி பெற முடியாத பாரதிய ஜனதா கட்சி தமிழ் நாட்டில் அடுத்த ஆட்சி எங்கள் ஆட்சி தான் என்று நினைப்பது பகல் கனவாக தான் முடியும்.இந்த மண் தமிழ் மண் இங்கு காவி அடிக்க நினைத்தால் 2024 பாராளுமன்ற தேர்தலை போல பாரதிய ஜனதாவை 2026 சட்ட மன்ற தேர்தலிலும் தமிழ் நாட்டு மக்கள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத அளவு செய்து விடுவார்கள். மேலும் தமிழக விவசாய மக்களுக்கு திட்டங்களை அறிவிப்பார் என்று மத்திய அமைச்சரின் வருகையை தமிழக விவசாயிகள் எதிர்பார்த்து இருந்த போது தமிழ்நாடு சட்டசபையில் 2026-ல் செங்கோலை வைப்போம் என்று பேசி தமிழக விவசாயிகளின் காதுகளில் விஷத்தை ஊத்தி சென்று இருக்கிறார். மத்திய விவசாய துறை அமைச்சரின் இச் செயல் கண்டனத்துக்குரியது என்பதை தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறினார்
No comments:
Post a Comment