திருநெல்வேலி திருமண்டலம் ஆலங்குளம் சேகர 30 வது ஸ்தோத்திரப் பண்டிகை 4 நாட்கள் நடைபெற்றது.
கடந்த வியாழக்கிழமை பவனி மற்றும் கொடியேற்றத்துடன் பண்டிகை தொடங்கியது. அன்று மாலை நடந்த ஆயத்த ஆராதனையில் இரட்சண்யபுரம் சேகரத் தலைவர் ஜான் செல்வம் இறை செய்தி அளித்தார். இரவு சேகர பள்ளி மற்றும் சபை மக்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை அதிகாலை நடைபெற்ற அருணோதய பிராத்தனையில் சீயோன் நகர் சபை ஊழியர் ராஜையா இறை செய்தி அளித்தார். காலையில் சிறுவர் - சிறுமியர், இளைஞர்கள், இளம்பெண்கள் ஆகியோருக்கு தனித்தனியே கூடுகை நடைபெற்றது. மதியம் நடைபெற்ற சேகர பெண்கள் பண்டிகையில் சகுந்தலா அசரியா இறை செய்தி அளித்தார். இரவு ஐஎம்எஸ் குழுவினரின் பல்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று முன்தினம் அதிகாலை நடைபெற்ற அருணோதயப் பிராத்தனையில் மாணிக்கம் இறை செய்தி அளித்தார். காலையில் குழந்தைகள், பெரியவர்களுக்கு ஞானஸ்நான ஆராதனை நடைபெற்றது. அதில் தூத்துக்குடி நாசரேத் திருமண்டல ஆரம்ப-நடுநிலைப் பள்ளிகள் மேலாளர் ஜேஸ்பர் அற்புதராஜ் இறை செய்தி அளித்தார். மதியம் நடைபெற்ற பிரதான பண்டிகை ஆராதனையில் திருநெல்வேலி திருமண்டல உப தலைவர் சுவாமிதாஸ் இறை செய்தி அளித்து காணிக்கைகளை ஆசிர்வதித்தார். இரவு இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று காலையில் நடைபெற்ற திருவிருந்து ஆராதனையில் தேவர்குளம் சேகரத் தலைவர் ஞானப்பிரகாசம் இறை செய்தி அளித்தார். மதியம் நடைபெற்ற வருடாந்திரக் கூட்டத்திற்கு கிறிஸ்தவ ஆலய பணியாளர் நலவாரிய சங்கத் தலைவர் விஜிலா சத்தியானந்த் தலைமை வகித்தார். ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி முதல்வர் வில்சன் முன்னிலை வகித்தார். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ராபர்ட் புரூஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பாளையஞ்செட்டிகுளம் சேகரத் தலைவர் டேனியல் சாலமோன் இறை செய்தி அளித்தார். இரவு கீத ஆராதனை, பஜனை பிரசங்கம் ஆகியவை நடைபெற்றது. சேகரம் முழுவதுமிருந்து திரளானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சேகரத் தலைவர் கிங்ஸ் ஹேமில்டன் சாமுவேல், செயலார் செல்வன், பொருளாளர் துரைசிங், சபை ஊழியர்கள், சேகர பெருமன்ற உறுப்பினர் நெல்சன், கமிட்டி உறுப்பினர்கள் பால் ஆப்ரகாம், , கமிட்டி உறுப்பினர்கள் பால் ஆபிரகாம், ஜெயதாசன், ஐசக் இம்மானுவேல், லிவிங்ஸ்டன் விமல், சைமன், மதன்சிங்,மகேஷ். உட்பட சேகர மக்கள் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment