போதை இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு நிகழ்வு. - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday 26 June 2024

போதை இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு நிகழ்வு.

 


போதை இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு நிகழ்வு. 


பேராவூரணி ஜுன் 25 தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு  காலை 10 மணி அளவில் டாக்டர் கலாம் பாலிடெக்னிக் மற்றும் பார்மசி கல்லூரி, திருச்சிற்றம்பலம் காவல் நிலையம், தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு இணைந்து புகையிலைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி திருச்சிற்றம்பலத்தில் நடைபெற்றது. டாக்டர் கலாம் பார்மசி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட பேரணியை பட்டுக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் திரு எல். பாஸ்கர் அவர்கள் துவக்கி வைத்தார். புகையிலைக்கு எதிரான கோஷங்கள் எழுப்பி திருச்சிற்றம்பலம் கடைவீதியில் பேரணி நடைபெற்றது. 


அதனைத் தொடர்ந்து, கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வுக்கு பார்மசி கல்லூரி முதல்வர் முனைவர் அன்பழகன் வரவேற்புரை நிகழ்த்தினார். 


தொடர்ந்து, பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் மதிவாணன் புகையிலைக்கு எதிரான உறுதி மொழியை வாசிக்க அனைத்து கல்லூரி மாணவர்களும் உறுதிமொழி ஏற்றனர்.


நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராக பட்டுக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் பாஸ்கர், சிறப்பு விருந்தினர்களாக திருச்சிற்றம்பலம் காவல்துறை ஆய்வாளர் சேரன், புதுக்கோட்டை எஸ்பிஐ லைஃப் கிளை மேலாளர் ராம்குமார், தமிழ்நாடு தன்னார்வலர்கள் ஒருங்கிணைப்பாளர் சர்வம் சரவணன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு புகையிலை பயன்பாட்டிற்கு எதிராக சிறப்புரையாற்றினார்கள். மேலும், தமிழக அரசின் புகையிலை பயன்பாட்டிற்கு எதிரான கட்டணமில்லா அலைபேசி எண் 10581 மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பார்மசி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி துணை முதல்வர்கள் பரிமளா தேவி மற்றும் கணேசன், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மக்கள் தொடர்பு அலுவலர்பெரம்மமூர்த்தி, 400 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நிறைவாக கல்லூரி நாட்டு நலபணித் திட்ட அலுவலர் சரவணன் நன்றி கூறினார்


பேராவூரணி நீலகண்டன்

No comments:

Post a Comment

Post Top Ad